கோவை அருகே வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை மானாம்பள்ளி வனச்சரகத்தில் நேற்று ஒரு மணி அளவில் சிறுகுன்றா பகுதியில் இருந்து குடியிருப்பை நோக்கி வந்து கொண்டிருந்த யானையை வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் அப்பகுதிக்கு வராத வண்ணம் பாதுகாத்து அடர்ந்த காட்டுப் பகுதியில் விரட்டியடித்தனர்.
மேலும், இரவு நேரங்களில் தொழிலாளர் குடியிருப்பு மற்றும் சத்துணவுக் கூடங்கள், மகளிர் சுய உதவி குழு கடைகளை உடைத்து அதில் உள்ள அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை உண்பதற்காகவே குடியிருப்பு பகுதியை நோக்கி படையெடுத்து வருகிறது. இதனால் குடியிருப்புவாசிகள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.
மேலும், வால்பாறை பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை இப்பகுதியில் யானைகள் அதிக அளவில் முகாமிட்டு இருக்கும். இன்னும் சில நாட்களில் இந்த யானை கூட்டமானது கேரளாவை நோக்கி செல்லும் என வனத்துறை கூறியுள்ளது. தற்போது வனப்பகுதியையொட்டி உள்ள பகுதிகளில் யாரும் விறகு எடுப்பதற்கோ, அதன் வழியே செல்லும்போதோ கவனமாகச் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:Viral Video:இதையும் விட்டு வைக்கலையா... BAR-ஆக மாறிய பஞ்சாயத்து அலுவலகம்!