கரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் மூடப்பட்ட, கோயம்புத்தூர் மாவட்ட போத்தனூர் காவல் நிலையம் 18 நாட்களுக்குப் பின் திறக்கப்பட்டது. கரோனா வைரஸ் பரவுவதனால் காவலர்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் போத்தனூர் காவல் நிலைய காவலர்களுக்கு, வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதன்காரணமாக அவர்கள் பணிபுரிந்த அந்த காவல் நிலையம் ஏப்ரல் 24ஆம் தேதி மூடப்பட்டு, அருகில் இருந்த மண்டபங்களில் தற்காலிகமாக காவல் நிலையம் செயல்பட்டு வந்தது. அதன்பின் 18 நாட்கள் கழித்து மூடப்பட்ட போத்தனூர் காவல் நிலையம் இன்று( மே13) திறக்கப்பட்டது.
இந்நிலையில் திறக்கப்பட்ட அந்த காவல் நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவலர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும்; மேலும் புகார் அளிக்க வரும் பொதுமக்களும் கைகளைக் கழுவி விட்டு, முகக்கவசம் அணிந்தே வரவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: வித்தியாசமான முறையில் கரோனா விழிப்புணர்வு - 'சபாஷ் சண்டைக் கலைஞர்களே!'