கோவை: திமுக தலைவர் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் 505-இல் 202 நிறைவேற்றப்பட்டுள்ளது என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட திவான்பகதூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக சார்பில் கலையரசி சிலம்பரசன் என்பவர் ஆட்டோ ரிக்க்ஷா சின்னத்தில் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக பூச்சனாரி, திவான்சாபுதூர், கணபதிபாளையம் பகுதிகளில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வாக்கு சேகரித்தார்.
இதனை தொடர்ந்து திவான்சாபுதூர் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன், ஒன்றிய செயலாளர் கன்னிமுத்து, பொள்ளாச்சி விவசாய அணி மாநில துணைத் தலைவர் தமிழ்மணி, நகரச் செயலாளர் வடுகைபழனிச்சாமி, நகர துணைத் தலைவர் கார்த்திகேயன், அமுதபாரதி, குள்ளக்காபாளையம் நாகராஜன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
மேலும் அவர், திமுக தலைவர் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் 505-இல் 202 நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.
இதையும் படிங்க: உசிலம்பட்டி மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - மு.க. ஸ்டாலின்