கோயம்புத்தூர்: கடந்த 2020 ஜூலை மாதம் நல்லாம்பாளையம், டவுன்ஹால், ரயில்நிலையம் ஆகிய பகுதிகளில், 4 சிறிய கோயில்கள் அடுத்தடுத்து சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக, சேலத்தைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் மீது, 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 27ஆம் தேதி கரோனா தொற்று காரணமாக, கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில், கஜேந்திரன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
![தப்பிச் சென்ற கைதி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/09:53:56:1643430236_tn-cbe-01-accused-escape-photo-script-tn10027_29012022095036_2901f_1643430036_869.jpg)
இந்நிலையில் நேற்று (ஜன 28) இரவு சிறை கைதிகளுக்கான வார்டில் இருந்து கஜேந்திரன் தப்பி சென்றுள்ளார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர், நகரின் பல்வேறு பகுதிகளில் அவரை தேடி வருகின்றனர். இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஏழு மயில்கள் விஷம் வைத்து கொலை - ஒருவர் கைது