ETV Bharat / state

ஒரு வயது பெண் குழந்தைக்கு தீ வைத்த தாய் தீக்குளித்து தற்கொலை - baby girl

கோவை: பொள்ளாச்சி அருகே குடும்பத் தகராறு காரணமாக ஒரு வயது குழந்தைக்கு தீ வைத்து தாயும் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

committed suicide
author img

By

Published : Aug 21, 2019, 10:27 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே சுப்பையா கவுண்டன் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விவசாயக்கூலி தொழிலாளி சதீஷ் அவரது மனைவி மாலதி. இந்த தம்பதிக்கு சசிகுமார் என்ற 7 வயது மகனும், மகா ஸ்ரீ என்ற ஒரு வயது மகளும் உள்ளனர்.

சதீஷ் தினமும் மது அருந்திவிட்டு வருவதால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை சதீஷ் மனைவி மாலதியுடன் தகராறில் ஈடுபட்டு பின் வேலைக்குச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. கணவரின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்த மாலதி, குழந்தை மகா ஸ்ரீ மீதும் தன் மீதும் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

தாயும் மகளும் தீயில் கருகி பலி

மாலதியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து சென்று பார்த்தபோது இருவரும் உடல் கருகி இறந்த நிலையில் கிடந்துள்ளனர். பின்னர் அப்பகுதியினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அங்கு வந்த போலீசார், இருவரின் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக காவல்துறையினர் சதீஷிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத் தகராறில் குழந்தை மீது மண்ணெண்ணையை ஊற்றி தாயும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Intro:fire deathBody:fire deathConclusion:பொள்ளாச்சி அடுத்த சுபேகவுண்டன்புத்தூர் கிராமத்தில் குடும்பத் தகராறில் ஒரு வயது மகளுக்கு தீ வைத்து தாயும் தீக்குளித்து உயிரிழப்பு - போலீசார் விசாரனை

பொள்ளாச்சி : ஆக - 21
பொள்ளாச்சி அருகே உள்ள சுப்பையா கவுண்டன் புதூர் கிராமத்தைச் சேர்ந்த தேங்காய் உரிக்கும் தொழிலாளி ஈஸ்வரசாமி என்கின்ற சதீஷ், இவரது மனைவி மாலதி இவர்களுக்கு சசிகுமார் என்ற 7 வயது மகனும்,மகா ஸ்ரீ என்ற ஒரு வயது மகளும் உள்ளனர். சசிகுமார் நான்காம் வகுப்பு படித்து வருகிறார் இந்நிலையில் சதீஷ் தினமும் மது அருந்திவிட்டு வருவதால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது, இந்நிலையில் இன்று காலை சதீஷ் மனைவி மாலதியுடன் தகராறு செய்து விட்டு வேலைக்குச் சென்று விட்டதாக கூறப்படுகிறது, இதனால் மனமுடைந்த மாலதி குழந்தை மகாஸ்ரீ மீதும் தன் மீது மண்ணெண்ணயை ஊற்றி பற்ற வைத்துக் கொண்டார் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் கதவை உடைத்து சென்று பார்த்தபோது இருவரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர், பின்னர் அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அங்கு விரைந்த ஆனைமலை போலீசார் தற்கொலை செய்துகொண்ட இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் கணவர் சதீஸ்சிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், குடும்பத் தகராறில் குழந்தை மீது மண்ணெண்ணையை ஊற்றி தாயும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
பேட்டி - சரண்ராஜ் - உறவினர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.