ETV Bharat / state

ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு - காவல் துறையினர் விசாரணை! - ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு

கோயம்புத்தூர்: ரயில் மோதி 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரயிலில் மோதி 50 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழப்பு

author img

By

Published : Feb 22, 2021, 7:40 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் புரூக்பாண்ட் சாலையிலுள்ள ரயில் தண்டவாளத்தில் டெல்லி-கோவை வழியாக திருவனந்தபுரம் செல்லும் விரைவு ரயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைக் கண்ட ரயில் ஓட்டுநர் உடனே ரயிலை நிறுத்தியதையடுத்து, கோயம்புத்தூர் ரயில்வே காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், ரயிலுக்கு அடியில் சிக்கி உயிரிழந்தவரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடைமைகளை ஆய்வு செய்தபோது அவர் புற்றுநோயாளி என்பது போன்ற ஆணவங்கள் கிடைத்துள்ளன.

உயிரிழந்தவர் சிகிச்சையிலிருந்து பாதியில் வந்தவர் போல் இருந்துள்ளார். எனவே ஆவணங்களை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், ரயில் சுமார் 1 மணி நேரம் தாமதமாக சென்றது.

இதையும் படிங்க: கடன் தொல்லை: ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.