ETV Bharat / state

கோவையில் பிரேக் பிடிக்காத அரசுப்பேருந்து ஐயப்பன் கோயிலில் புகுந்ததால் பரபரப்பு

author img

By

Published : Dec 29, 2022, 9:35 PM IST

கோவையில் இருந்து ஆனைகட்டிக்கு வந்தபோது பிரேக் பிடிக்காமல், அங்கு ஐயப்பன் கோயிலில் பூஜைக்காக போடப்பட்டிருந்த பந்தலை இடித்துக்கொண்டு அருகே இருந்த உணவகத்திற்குள் புகுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பிரேக் பிடிக்காத அரசு பேருந்து ஐயப்பன் கோவிலில் புகுந்ததில்- கோவையில் பரபரப்பு
பிரேக் பிடிக்காத அரசு பேருந்து ஐயப்பன் கோவிலில் புகுந்ததில்- கோவையில் பரபரப்பு
கோவையில் பிரேக் பிடிக்காத அரசுப்பேருந்து ஐயப்பன் கோயிலில் புகுந்ததால் பரபரப்பு

கோவையில் இருந்து ஆனைகட்டி வழியாக கேரள மாநிலம் மன்னார்காட்டிற்கு TN38 N 2910 என்ற பதிவு எண் கொண்ட அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. கோவையில் இருந்து ஆனைக்கட்டி வரை சென்று அங்கு சிறிது நேரம் பேருந்தை நிறுத்தி விட்டு மன்னார்காட்டிற்கு செல்லும்.

இப்பேருந்தை இன்று மதியம் வெள்ளியங்கிரி என்பவர் ஆனைகட்டிக்கு ஓட்டி வந்தபோது, பேருந்தில் பிரேக் பிடிக்காமல் ஆனைக்கட்டியில் இருந்த டீக்கடையில் மோதியுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த நிலையில் இப்பேருந்தை ஓட்டிவந்த ஓட்டுநர் பணி முடிந்து, இறங்கிவிட அதையடுத்து இப்பேருந்தை குப்புராஜ் என்ற ஓட்டுநர் ஓட்டிவந்துள்ளார்.

குப்புராஜ்-க்கு வண்டியில் பிரேக் பிடிக்காததை, வெள்ளிங்கிரி தெரிவிக்கவில்லை எனத் தெரிகிறது.
இந்த நிலையில் இன்று மாலை 4.30 மணியளவில் அதே பேருந்து மீண்டும் கோவையில் இருந்து ஆனைகட்டிக்கு வந்தபோது மீண்டும் பிரேக் பிடிக்காமல், அங்கு ஐயப்பன் கோயில் பூஜைக்காக போடப்பட்டிருந்த பந்தலை இடித்துக் கொண்டு அருகே இருந்த உணவகத்திற்குள் புகுந்த நின்றுள்ளது.

இந்த விபத்தில் ஒரு சிலர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் அங்கு நிறுத்தியிருந்த ஒரு காரும் சேதமடைந்தது. இது தொடர்பாக கிளை மேளாலளரிடம் கேட்டபோது உங்கள் பகுதிக்கு பேருந்து வேண்டுமா? வேண்டாமா? என அலட்சியமாக கேட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து அங்கு வந்த மற்றொரு அரசுப்பேருந்தை சிறைப்பிடித்த பொதுமக்கள் கிளை மேலாளர் அங்கு வர வேண்டும் என்றனர். சிறிது நேரம் கழித்து சிறைபிடிக்கப்பட்ட பேருந்து விடுவிக்கப்பட்டது.

மலைப் பகுதிகளில் பராமரிப்பில்லாத பேருந்துகளை இயக்கினால், பெரும் அசம்பாவிதம் ஏற்படும் என்றும், பெரும்பாலான அரசுப் பேருந்துகள் போதிய பராமரிப்பில்லாமல் இப்பகுதியில் இயக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க:Audio Leak: ரேஷன் கடத்தல் கும்பலுடன் காவல் ஆய்வாளர் பேசும் உரையாடல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.