ETV Bharat / state

கோவை ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு புதிய கார் புக்கிங் பணிகள் நிறைவு - வாயைப் பிளக்கவைக்கும் விலை!

author img

By

Published : Jul 2, 2023, 4:10 PM IST

கோவை பெண் ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு 16 லட்சம் ரூபாய் மதிப்பலான மகேந்திரா கம்பெனியின் மரோசோ கார் புக்கிங் பணிகள் நிறைவு செய்யப்பட்டு, கமல் பண்பாட்டு மையம் சார்பில் சில நாட்களில் வழங்கப்பட உள்ளது.

ஷர்மிளாவிற்கு புதிய கார் புக்கிங் பணி நிறைவு

கோயம்புத்தூர்: கோவையின் முதல் தனியார் பேருந்து பெண் ஓட்டுநர் என்ற வகையில் பிரபலமானவர் தான், ஷர்மிளா (வயது 23). கோவை வடவள்ளியைச் சார்ந்த இவரைப் பற்றிய செய்திகள் இணையதளங்களில் வைரலாகி வந்த நிலையில், அனைத்து தரப்பினரும் ஷர்மிளாவிற்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர்.

பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஷர்மிளாவின் பேருந்தில் பயணம் செய்து அவருடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் அந்தப் பேருந்தில் பயணம் செய்து ஷர்மிளாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.

கனிமொழி பயணம் செய்த ஒரு மணி நேரத்தில் தன்னைப்பேருந்து உரிமையாளர் துரைக்கண்ணன் என்பவர், வேலையை விட்டு நீக்கியதாகத் தெரிவித்த ஷர்மிளா, பேருந்து ஓட்டுநர் பணியை விட்டு கால் டாக்ஸி ஓட்டப்போவதாக தெரிவித்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை சென்னையில் ஷர்மிளா சந்தித்து உரையாடினார்.

அப்போது வாடகை கார் வாங்குவதற்காக மக்கள் நீதி மய்யம் பண உதவி செய்யும் எனத் தெரிவித்து அதற்கான முதல் கட்ட காசோலையை ஷர்மிளாவிடம் கமல்ஹாசன் வழங்கினார். மேலும் புதிய கார் புக் செய்தவுடன் மீதித்தொகை வழங்கப்படும் என மக்கள் நீதி மய்யம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து கோவை அவினாசி சாலையில் உள்ள பிரபல கார் சோரூமில் ஷர்மிளா பெயரில் 16 இலட்சம் ரூபாய் மதிப்பலான மகேந்திரா மரோசா கார் புக் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மக்கள் நீதி மய்ய கோவை நிர்வாகிகள் கூறுகையில், 'ஷர்மிளாவின் வங்கிக் கணக்கிற்கு முழு பணமும் ஓரிரு நாட்களில் மய்யம் சார்பில் வரவு வைக்கப்படும்.

தொழில் முனைவராக ஷர்மிளாவை மாற்றும் நோக்கில் காரை கமல்ஹாசன் வாங்கிக் கொடுத்துள்ளார். அதன் முழுத் தொகையும் கமல் பண்பாட்டு மையம் சார்பில் தான் அளிக்கப்படுகிறது' எனவும் தெரிவித்தனர்.

முதலில் 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார் எனக் கூறப்பட்டிருந்த நிலையில் அதன் விலை ரூ.16 லட்சமாகவும் ஏழு பேர் வரையும் அமர்ந்து செல்லக்கூடிய காரை முன்பதிவு செய்யும் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து இருப்பதாகத் தெரிவித்தனர். மேலும் இன்னும் சில தினங்களில் கார் ஷர்மிளாவிற்கு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

மக்கள் நீதி மய்யத்தில் தலைவர் கமல்ஹாசன் ஷர்மிளாவுக்கு கார் வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில் பல்வேறு ஆதரவு எதிர்ப்பு கருத்துகள் நிலவி வந்தன. தற்போது புதிய கார் இன்னும் சில தினங்களில் ஷர்மிளாவிற்கு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 2020-21 முதலே ஆன்லைன் கலந்தாய்வில் முறைகேடு - மீன்வளப் பல்கலைக்கழகத்தில் அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.