ETV Bharat / state

உயிரிழந்த நான்கு மாத குழந்தையை 4 கி.மீ. தூரம் தூக்கி சென்ற தந்தை!

சாலை வசதி இல்லாததால் உயிரிழந்த 4 மாத குழந்தையை, நான்கு கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதி வழியாக குழந்தையின் தந்தை தூக்கிச் சென்றது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த நான்கு மாத குழந்தையை 4 கி.மீ. தூரம் தூக்கி வந்த தந்தை!

author img

By

Published : Jul 14, 2022, 3:38 PM IST

கோயம்புத்தூர் : ஆனைகட்டி அடுத்த கேரளா மாநிலம் அட்டப்பாடி முருகலா பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்தவர்கள், ஐயப்பன் - சரஸ்வதி தம்பதி. இவர்களின் நான்கு மாத பெண் குழந்தை உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், பாலக்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. பிரேத பரிசோதனைக்கு பின் பாலக்காடு அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். அப்போது தாடிக்கொண்டு பகுதி வரை மட்டுமே சாலை வசதி உள்ளது.

எனவே அங்கிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது கிராமத்திற்கு உயிரிழந்த தனது நான்கு மாத குழந்தையை, தந்தை ஐயப்பன் மார்பில் அனைத்தபடி வனப்பகுதி வழியாகவும், தொங்கு பாலம் மரக்கட்டைகள் மீதும் ஏறியும் தனது கிராமத்திற்கு சென்றுள்ளளார். இது அக்கிராம மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 1ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - பள்ளி பியூன் போக்சோவில் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.