பொள்ளாச்சி: பொள்ளாச்சி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட கடந்த 12ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை அஇஅதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர், பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சுயோச்சைகள் உள்பட 36 பேர் மனுதாக்கல் செய்து இருந்தனர்.
இந்நிலையில், தேர்தல் நடத்தும் அலுவலர் வைத்தியநாதன் தலைமையில் தேர்தல் பார்வையாளர் சீமாவிஸ்வாஸ் முன்னிலையில் வேட்புமனுக்கள் பரிசீலினை நடைபெற்றன. இதில் 28 வேட்புமனுக்களில் தேர்தல் விதிமுறைகளின்படி முழுமையாக பூர்த்தி செய்யாமலும் உறுதிமொழி ஏற்பு படிவங்களில் செய்திருந்த குளறுபடிகளின காரணமாகவும் வேட்பாளர்களுக்கு முன்மொழிபவரின் பெயர் குறிப்பிடாதது என பல்வேறு காரணங்களால் தள்ளுபடி செய்யப்பட்டன.
அந்த வகையில் 36 மனுக்களில், 8 மனுக்கள் ஏற்கப்பட்டு 28 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் இரா.வைத்தியநாதன் தெரிவித்தார். பெண் விடுதலை கட்சி நிறுவனர் சபரிமாலா சுயேச்சையாக வேட்புமனு செய்து இருந்த நிலையில் அவரின் மனுவும் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.