ETV Bharat / state

பிரதமரின் 73வது பிறந்தநாள்; 73 புதுமண தம்பதிகளுக்கு இலவச நாட்டு பசு வழங்கிய அண்ணாமலை! - 73 couples wedding ceremony

PM Modi's 73rd birthday: ”இந்து தர்மத்தை, நம்முடைய சமயத்தை, பாரம்பரியத்தை காப்பாற்றுவதற்கு பசு மாடுகள் உங்களிடம் இருக்க வேண்டும்” என பிரதமர் மோடியின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற திருமண விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

73 திருமண தம்பதிகளுக்கு நாட்டு பசு மாடுகள் வழங்கி சிறப்பித்த அண்ணாமலை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 17, 2023, 4:16 PM IST

73 திருமண தம்பதிகளுக்கு நாட்டு பசு மாடுகள் வழங்கி சிறப்பித்த அண்ணாமலை!

கோயம்புத்தூர்: போத்தனூர், செட்டிப்பாளையம் சாலையில் கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு, 73 ஜோடிகளுக்கு 73 வகையான சீர்வரிசைகளுடன் இலவசத் திருமணம் மற்றும் 73 குடும்பங்களுக்கு 73 நாட்டு மாடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தாமரை திருமண திருவிழா என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த திருமண விழா, கோவை பாஜக தெற்கு மாவட்டத் தலைவர் வசந்தராஜன் தலைமையில் நடைபெற்றது. மேலும், இந்த திருமண விழாவில் தமிழ் மொழியில் மந்திரங்கள் ஓதப்பட்டன. இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு, தாலியை எடுத்துக் கொடுத்து மணமக்களை வாழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து திருமண ஜோடிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு, விழாவில் சிறப்புரை ஆற்றிய அண்ணாமலை, “இத்தனை நாட்களாக நீங்கள் யார் என்று தெரியாது. இன்றிலிருந்து நீங்கள் எங்கள் உறவுகள். உங்களுக்கும் இந்த திருமண நிகழ்வின் மூலம் பல்வேறு சொந்தங்கள் கிடைக்கப் பெற்றுள்ளனர்.

புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் செங்கோலை வைக்கும் பொழுது இங்கிருந்து அழைத்துச் சென்ற சிவனடியார்கள், பதிகம் பாடிய நிலையில் பிரதமர் செங்கோலை வைத்தார். சிவனடியார்கள் அனைத்தையும் துறந்து பொதுநலத்திற்காக தொடர்ந்து சேவை செய்து வரக் கூடியவர்கள். சனாதன தர்மமும், இந்து தர்மமும் நிலைத்திருக்கக் காரணம், சிவனடியார்கள் பங்காற்றியதுதான்.

சிவனடியார்கள் தமிழகம் முழுவதும் இந்து தர்மத்தையும், சனாதன தர்மத்தையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய பிரதமரும் பொது நலத்திற்காக தொடர்ந்து ஆட்சி நடத்திக் கொண்டிருக்கக் கூடிய ஒரு மகான். பிரதமர் மோடி 2014-இல் ஆட்சிக்கு வந்த பிறகு கோயில்களை பாதுகாத்து, எவ்வாறு இந்து தர்மத்தை மீட்டு கொடுத்திருக்கின்றார் என்பதை நாம் பார்க்கிறோம்.

இதையும் படிங்க: "இந்தியா கூட்டணி போல் மணமக்கள் ஒற்றுமையாக வெற்றி பெற வேண்டும்" -அமைச்சர் உதயநிதி!

வாரணாசியில் முகலாயர்கள் எந்த விதத்திலும் வந்து விடக்கூடாது என்பதற்காகவே வீடுகளை நெருக்கமாக கட்டியதாக காசி தமிழ் சங்கத்தின் பொழுது ஒருவர் என்னிடம் தெரிவித்தார். தற்போதைய காலத்தில் சனாதன தர்மமும், இந்து தர்மமும் மிகவும் உறுதியாக உள்ளது. அதனை அழிக்க யாராலும் முடியாது என்று தெரிந்த பிறகு, வாரணாசியில் அந்த இடத்தை அவர்கள் விட்டுக் கொடுத்திருக்கின்றனர்.

மேலும், திருமணம் முடிந்து செல்லும் பொழுது திருமண தம்பதிகளுக்கு நாட்டு பசு மாடு ஒன்றும் வழங்கப்படுகிறது. என்னுடைய சார்பிலும் ஒரு பசுமாடு வழங்கப்பட உள்ளது. உங்களுக்கு பிறக்கின்ற குழந்தை எவ்வாறு இந்த மண்ணில் நல்ல மனிதர்களாக வருகிறார்களோ, அதேபோல பசு மாட்டின் கன்றுக் குட்டிகளும், இந்து தர்மத்தை, நம்முடைய சமயத்தை, பாரம்பரியத்தை காப்பாற்றுவதற்கு உங்களிடம் இருக்க வேண்டும். என்னுடைய திருமணமும் 12 ஆண்டுகளுக்கு முன்பு இதே போல சிவனடியார்கள் நடத்தி வைத்தார்கள்” என கூறினார்.

மேலும் இந்நிகழ்வில் ஜூன் 5ஆம் தேதி யோகி ஆதித்யநாத் பிறந்த தேதியிலேயே பிறந்த ஒரு குழந்தைக்கு, அவர்களது பெற்றோரின் விருப்பத்தின் பேரில் யோகி ஆதித்யநாத் என்ற பெயரை சூட்டி, இந்து தர்மத்தை பாதுகாக்கk கூடிய ஏழை மக்களுக்கு அரணாக இருக்கக்கூடிய நாட்டிற்கு தலைவனாக வரவேண்டும் என வாழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மாநிலp பொருளாளர், எஸ்.ஆர்.சேகர் உLபட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கோ மாதா பூஜை நடைபெற்றது.

இதையும் படிங்க: LIVE : தாமரை திருமண விழா - பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரம்மாண்ட திருமண விழா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.