கோயம்புத்தூர் மாவட்டம், ராமகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த பத்து வயது சிறுமி அருகிலுள்ள கடைக்குச் சென்றுள்ளார். கடைக்குச் சென்ற மகள் நீண்ட நேமாகியும் வராததால், அவரது தாய் பதறியடித்துக் கொண்டு சிறுமியைத் தேடி வந்துள்ளார். அரை மணி நேரம் கழித்து வீட்டுக்கு வந்த சிறுமி, அவரது தாயைக் கட்டி பிடித்து அழுததோடு, மளிகை கடைக்குச் சென்றபோது கடையின் உரிமையாளர் தன்னிடம் தவறாக நடந்தது குறித்து தெரிவித்துள்ளார்.
பின்னர், இதுகுறித்து சிறுமியின் தாயார் ராமனாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் மளிகை கடையின் உரிமையாளர் கனகராஜை (70) போக்சோ சட்டத்தில் கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.