ETV Bharat / state

இஸ்ரேல்-பாலஸ்தீன் போர்; இஸ்ரேலில் இருந்து கோவை திரும்பிய 7 பேர்! - Coimbatore District Collector

Israel conflict: இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையே நடைபெறும் போர் பகுதியிலிருந்து 'ஆபரேஷன் அஜய்' திட்டத்தின் மூலமாக ஏழு பேர் கோவை வந்துள்ளனர்.

இஸ்ரேலில் இருந்து கோவை திரும்பிய 7 பேர்!
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 14, 2023, 9:34 AM IST

இஸ்ரேல்-பாலஸ்தீன் போர்

கோயம்புத்தூர்: இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ‘ஆபரேஷன் அஜய்’ என்ற திட்டத்தின் மூலமாக, முதலாவதாக அப்பகுதியில் இருந்த 212 இந்தியர்கள் மீட்கப்பட்டு, விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, டெல்லி வந்த இந்தியர்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 28 பேரில் 21 பேர் சென்னை விமான நிலையத்திற்கும், 7 பேர் கோவை விமான நிலையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். அதன்படி டெல்லியிலிருந்து விமல், ரஞ்சித், சந்தியா, வினோத், சந்தோஷ், திவாகர், ராஜலட்சுமி ஆகிய 7 பேர் கோவை விமான நிலையத்திற்கு வந்தனர்.

இந்நிலையில், கோவை வந்த 7 பேரையும் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வரவேற்றார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இஸ்ரேலில் இருந்த கோவை, நாமக்கல், கரூர், நீலகிரி பகுதிகளைச் சேர்ந்த 7 பேர் கோவைக்கு வந்துள்ளனர். தமிழ்நாடு மாணவ, மாணவிகள் சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டு, பின்னர் அங்கிருந்து கோவைக்கு விமானம் மூலம் வந்துள்ளனர்.

கோவையைச் சேர்ந்தவர்களை அழைத்துச் செல்ல அவர்களது பெற்றோர் வந்துள்ளனர். மற்ற பகுதிகளுக்குச் செல்பவர்களுக்கு வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அவர்கள் நாடு திரும்பியுள்ளனர். இஸ்ரேலில் யாராவது இருந்தால், அரசு அறிவித்த உதவி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். பயம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக நாடு திரும்பியுள்ளனர்” என்று கூறினார்.

இஸ்ரேலில் இருந்து கோவை திரும்பிய டாக்டர் திவாகர் கூறுகையில், “4 ஆண்டுகளாக இஸ்ரேலில் வேலை பார்த்து வந்தேன். அங்கு நிலவும் போர் சூழ்நிலையால் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளேன். எங்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் தொடர்பில் இருந்தன. டெல்லியில் இருந்து வர விமானம் மற்றும் உணவு ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்தது. வீட்டுக்குச் செல்லவும் ஏற்பாடு செய்துள்ளனர். எங்களை மீட்ட அனைவருக்கும் நன்றி.

இஸ்ரேலின் தெற்கு பகுதியில்தான் அதிக அளவில் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. வடக்கு பகுதியில் குறைவாக உள்ளது. ராக்கெட் தாக்குதல் நடந்தபோது பாதுகாப்பிற்காக ஷெல்டரில் தங்கி இருந்தோம்” என்று கூறினார்.

அதனை த்தொடர்ந்து, கோவையை சேர்ந்த முதுநிலை மருத்துவக் கல்லுாரி மாணவி ராஜலட்சுமி கூறுகையில், “இஸ்ரேலில் 18 ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர். இஸ்ரேலில் வடக்கு பகுதியில் நான் இருந்தேன். அங்கு பயம் இல்லை, இஸ்ரேல் அரசு பாதுகாப்பு தந்தது. ராக்கெட் தாக்குதல்கள் வருவதற்கு ஒரு நிமிடம் முன்பே தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. அதற்குள் பாதுகாப்பான இடங்களில் பதுங்கு இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர்.

உணவு, தண்ணீர், மின்சாரம் பிரச்னை இல்லை. இஸ்ரேல் வடக்கு பகுதிகளில் லெபனான், ஹிஸ்புல்லா தாக்குதல்கள் நடத்தினால் பிரச்னை ஏற்படும். பாதுகாப்பாக எங்களை அழைத்து வர ஏற்பாடு செய்த மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி” என்றார்.

இதையும் படிங்க: பாலஸ்தீன எல்லை பகுதியில் தமிழர்கள் யாரும் இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.