ETV Bharat / state

பொள்ளாச்சியில் களைகட்டிய சர்வதேச பலூன் திருவிழா! - கோவையில் சர்வதேச பலூன் திருவிழா

கோவை: சர்வதேச பலூன் திருவிழாவில் நெதர்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட வெப்பக் காற்று பலூன்கள் பறக்கவிடப்பட்டன.

balloon festival
சர்வதேச திருவிழா
author img

By

Published : Jan 11, 2020, 7:09 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஜனவரி மாதத்தில் சர்வதேச பலூன் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நடத்தி வருகிறது.

அதேபோல், இன்று ஆறாவது ஆண்டாக சர்வதேச பலூன் திருவிழா பொள்ளாச்சியில் தொடங்கியுள்ளது. இதில், நெதர்லாந்து, ஜப்பான் , தமிழ்நாடு சுற்றுலா கழகம் ஆகியவை சார்பாக மூன்று வெப்பக்காற்று பலூன்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்தத் திருவிழாவானது வரும் ஜனவரி 15ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும், இதற்காக பிரத்தியேகமாக வெளிநாடுகளிலிருந்து பைலட்டுகள் அழைத்துவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொள்ளாச்சியில் களைக்கட்டிய சர்வதேச திருவிழா

இதுகுறித்து நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், "அதிகாலையில் காற்று குறைவான நேரத்தில் பலூன்கள் வானில் பறக்கவிடப்படும். அதன்பின், மாலை நேரங்களில் பலூன்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன" என்றார்.

இதையும் படிங்க: வீதி மீறல் : சீட்டுக்கட்டாய் சரிந்த அடுக்குமாடி குடியிருப்புகள்!

Intro:baloonBody:baloonConclusion:பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா தொடங்கியது நெதர்லாந்து ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட வெப்பக் காற்று பலூன் வானில் பறந்தன

பொள்ளாச்சி ஜனவரி 11

பொள்ளாச்சியில் கடந்த 5 ஆண்டுகளாக ஜனவரிமாதம் பலூன் திருவிழா நடைபெற்று வருகிறது சுற்றுலா தளத்தை மேம்படுத்தும் வகையில் நடத்தப்பட்டு வரும் இந்த பலூன் திருவிழாவை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து நடத்தி வருகின்றன இந்நிலையில் 6 வது ஆண்டாக சர்வதேச பலூன் திருவிழா பொள்ளாச்சி கோவை ரோட்டில் உள்ள ஒரு மைதானத்தில் இன்று தொடங்கியது கட்டமாக நெதர்லாந்து, ஜப்பான், மற்றும் தமிழ்நாடு சுற்றுலா கழகம் சார்பாகவும் 3 வெப்பக்காற்று பலூன்கள் கொண்டுவரப்பட்டன இதற்காக வெளிநாடுகளிலிருந்து பைலட்டுகள் அழைத்துவரப்பட்டு பலூனில் காற்று நிரப்பி அதன் பின்னர் பயணிகளுடன் வானில் பறந்து சென்றன வானில் பறந்து சென்ற ராட்சச பலூன்களை கண்டு பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்ந்தனர் இன்று தொடங்கியுள்ள இந்தப் பலூன் திருவிழா வரும் 15ஆம் தேதி வரை நடக்க உள்ளது அதிகாலையில் காற்று குறைவான நேரத்தில் பலூன்கள் வானில் பறக்க விடப்படும் என்றும் மாலை நேரங்களில் பலூன்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு கலை நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளதாகவும் பொள்ளாச்சி பகுதியை சுற்றுலா தளமாக மேம்படுத்தும் விதமாக தொடர்ந்து பலூன் திருவிழா நடைபெற்று வருவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர் மேலும் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.