கோவை மாவட்டம் வால்பாறை வனத்துறைக்குச் சொந்தமான மானாம்பள்ளி பகுதியில் உட் பிரியர் பிளாண்டேஷன் தேயிலைத் தோட்டம் அமைந்துள்ளது.
இதற்கிடையில் சிறுகுன்றா, ஈட்டி ஆகிய பகுதிகளில் உள்ள துண்டு சோலையில் கூலித்தொழிலாளர்கள் முகில் நக சியா (32), முனீஸ்வரர் (32) ஆகியோர் கண்ணிவெடி வைத்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த வனத்துறையினர், தலா 25 ரூபாய் வீதம் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து விடுவித்தனர்.
மேலும், இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது வனஉயிரின பாதுகாப்புச் சட்டம் 1972இன்படி அபராதமும், கடுமையான தண்டனையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, வால்பாறை பகுதிகளில் காட்டு யானை கூட்டம் அதிக அளவில் வந்து செல்வதால், மானாம்பள்ளி புலிகள் காப்பகத்திலிருந்து ஐந்து வேட்டைத் தடுப்புக் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கோவை அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 28 பேர் கைது!