ETV Bharat / state

195 நாடுகளின் தேசிய கீதம் கேட்டு, பெயர் சொல்லும் 5 வயது சிறுமி!

195 நாடுகளின் தேசிய கீதத்தைக் கேட்டு, நாட்டின் பெயரை மழலை மொழியில் கூறி கோவையைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி அசத்தி வருகிறார்.

dfg
dfg
author img

By

Published : Sep 1, 2021, 7:00 PM IST

கோயம்புத்தூர்: கணபதி பகுதியைச் சேர்ந்த தம்பதி சதீஷ்குமார்- இந்துமதி. இவர்களுக்கு ஐந்து வயதில் ஆராத்யா என்ற பெண் குழந்தை இருக்கிறார். சிறு வயதிலேயே அதிக நினைவாற்றல் கொண்ட ஆராத்யா பல சாதனைகளைப் படைத்துள்ளார்.

195 நாடுகளின் தேசிய கீதத்தைக் கேட்டு, அது எந்த நாட்டின் தேசிய கீதம் என்று சரியாக கூறி அசத்துகிறார். இவரின் திறன் பற்றி அவர்களது பெற்றோர் வேல்டு புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்க்கு தெரியப்படுத்தினர். குழந்தையின் திறனை அங்கீகரிக்கும் வகையில் 'வேர்ல்டு புக் ஆஃப் ரெக்கார்டில்' இடம்பிடித்துள்ளார்.

195 நாடுகளின் தேசிய கீதம் கேட்டு, பெயர் சொல்லும் 5 வயது சிறுமி

குழந்தை ஆராத்யா இரண்டு வயதிலேயே உலக நாடுகளின் பெயர்கள், தேசிய கொடி, உலக அதிசயங்கள் எனப் பல தகவல்களை கூறி 'இந்தியன் புக் ஆஃப் ரெக்காா்டில்' இடம் பெற்றுள்ளார். குழந்தையின் சாதனையைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: 9 புத்தகங்கள் வெளியிட்டு சிறுமி சாதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.