ETV Bharat / state

49 வயது ஆணை அடித்து கொன்ற 5 திருநங்கைகள் - 5 people were arrested by Dudialur police and jailed

துடியலூர் அருகே பாலியல் இச்சைக்காக வந்த ஹோட்டல் ஊழியரை அடித்தே கொன்ற திருநங்கைகள் 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பாலியல் இச்சைக்காக வந்த நபரை அடித்து கொன்ற 5 திருநங்கைகள்

author img

By

Published : Jul 12, 2022, 9:47 PM IST

கோவை: மேட்டுப்பாளையம் சாலையில் இரவு நேரங்களில் திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 8ம் தேதி இரவு துடியலூரில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் வேலை செய்து வரும் பொன்னமராவதியைச் சேர்ந்த தர்மலிங்கம்(49) மற்றும் பிரவீன் ஆகியோர் ரேஸ்மிகா என்ற திருநங்கையிடம் பாலியல் இச்சைகாக சென்றுள்ளனர்.

அப்போது அவர்கள் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதாக தெரிகிறது. இதில் திருநங்கை ரேஸ்மிகா சத்தமிடவே அருகில் இருந்த திருநங்கைகள் மம்தா, கவுதமி, ஹர்னிகா, ரூபி, கீர்த்தி உள்ளிட்டோர் அங்கு வந்து தர்மலிங்கம் மற்றும் பிரவீன் ஆகியோரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் பிரவீன் ஓடிவிட தர்மலிங்கத்தை கடுமையாக தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். இதில் படுகாயமடைந்த தர்மலிங்கம் தாமாகவே கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று இருசக்கர வாகனத்தில் செல்லும் போது விழுந்து விட்டதாக கூறி சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.

இது குறித்து மருத்துவமனை தரப்பில் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து தர்மலிங்கத்திடம் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்து போலீசார் தீவிரமாக விசாரித்துள்ளனர். இதில் நடந்த உண்மை சம்பவங்களை போலீசாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அடிதடி வழக்கு பதிவு செய்த துடியலூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தர்மலிங்கம் உயிரிழந்ததால் வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் திருநங்கைகளை தேடி வந்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய கவுண்டம்பாளையம் பகுதியில் வசிக்கும் திருநங்கைகள் ரேஸ்மிகா, மம்தா, கவுதமி, ஹர்னிகா, ரூபி உள்ளிட்டோரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கீர்த்தி என்ற திருநங்கையை தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க:வகுப்பறை சுவற்றின் டைல்ஸ் விழுந்து மாணவன் காயம்: பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.