ETV Bharat / state

புலிகள் காப்பகப்பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாட முயற்சி செய்த 5 பேர் கைது! - வேட்டையாட முயற்சி

ஆனைமலை புலிகள் காப்பகப்பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாட முயற்சி செய்த 5 பேரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

5 பேர் கைது
5 பேர் கைது
author img

By

Published : Jun 13, 2022, 8:56 PM IST

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூன் 12ஆம் தேதி ஆனைமலை புலிகள் காப்பகப்பகுதிகளான பொள்ளாச்சி வனச்சரக மாங்கரை வனப்பகுதி சேத்துமடை, பணபள்ளம், ஆகியப் பகுதிகளில் இரண்டு முறை துப்பாக்கி சுடும் வெடி சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அருகில் உள்ள விவசாயத்தோட்டத்தில் பணிபுரியும் கணேஷ் என்பவர், வனக் காப்பாளர் ஆனந்தராஜுவுக்கு தகவல் அளித்ததன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

இதையடுத்து காண்டூர் கால்வாய் வழியாக காரில் வந்தவர்களிடம் சோதனை செய்ததில் துப்பாக்கி, மற்றும் தோட்டாக்கள் 5, கறி வெட்ட பயன்படுத்தும் அரிவாள், கத்தி இருப்பதைக் கண்ட வனத்துறையினர் காரில் வந்த 5 பேரிடம் ஆனைமலை வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் காட்டுப்பன்றியை வேட்டையாட வந்தது தெரியவந்தது. விசாரணையில் காரில் வந்த மோகன்ராம், பாலசுப்ரமணியன், ராஜ்குமார், சதீஸ் மற்றும் சதீஸ்குமார் ஆகிய 5 பேரை வன விலங்குகளை வேட்டையாடும் சட்டப் பிரிவின்படி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் இவர்கள் வேட்டையாட பயன்படுத்திய துப்பாக்கி, தோட்டா, அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து வனத்துறை அலுவலர் கூறும்பொழுது,’ வனப்பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் நடமாட்டத்தைக் கண்காணிக்க வனத்துறை உயர் அலுவலர் உத்தரவின்படி வனத்துறையினர் மற்றும் வேட்டைத் தடுப்புக்காவலர்கள் வனப்பகுதியில் குற்றங்களைத்தடுக்கும் விதமாக சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: CCTV:வறுத்த கறியில் மசாலா இல்லை... கடை உரிமையாளரை தாக்கிய கும்பல்...- போலீஸ் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.