பொள்ளாச்சியில், நேற்று (மார்ச் 18) பொள்ளாச்சி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாகத் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. இதனடிப்படையில், காவல் துறை உத்தரவின்பேரில் துணைக் கண்காணிப்பாளர் கேஜி சிவகுமார் தலைமையில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் பிரபுதாஸ், காவலர்கள் தனிப்படை அமைத்து காவல் துறையினர் பல்வேறு கட்ட விசாரணை நடத்தியும் வாகன சோதனை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், ஊஞ்சவேலம்பட்டி தனியார் பள்ளி அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்தவர்களைச் சோதனை செய்தனர். விசாரணையில் அவர்கள் பொள்ளாச்சியைச் சேர்ந்த சிவகுரு, சென்னையைச் சேர்ந்த வெங்கடேஷ், கோபி என்கிற கோபிநாத், வினோத் குமார் என்பது தெரியவந்தது.
இவர்கள், மாக்கினாம்பட்டி சாய்பாபா காலனி செல்வகணபதி நகர்ப் பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து 7 சவரன் நகைகளைத் திருடியதையும், வயதான மூதாட்டியிடம் 4 பவுன் தங்க செயினை வழிப்பறிசெய்ததையும் ஒப்புக்கொண்டார்கள்.
இதையடுத்து, அவர்களிடமிருந்து நகைகள் பறிமுதல்செய்யப்பட்டன. மேலும், இவர்களிடமிருந்து இருசக்கர வாகனமும் பறிமுதல்செய்யப்பட்டது. பின்னர் நான்கு பேரையும் காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: வாக்கு மையங்களில் கேமரா பொருத்தும் பணி: முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தலைமைத் தேர்தல் அலுவலர் சுற்றறிக்கை