ETV Bharat / state

'கோவையில் நிபா வைரஸ் சிகிச்சைக்காக தனி வார்டு தயார்' - நிஃபா வைரஸ்

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் நிபா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்க 30 படுக்கைகள் கொண்ட தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் முதல்வர் அசோகன் தெரிவித்தார்.

மருத்துவமனையின் முதல்வர் அசோகன்
author img

By

Published : Jun 6, 2019, 4:23 PM IST

கேரளாவில் இளைஞர் ஒருவர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், நிபா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கோவை அரசு மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி முதல்வர் அசோகன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது, "தமிழ்நாட்டில் பொது சுகாதாரத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் தேவையான முன்னெச்சரிக்கை, விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

கோவை மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை. இதனால் பொதுமக்கள் யாரும் அச்சமடையத் தேவையில்லை. ஏதேனும் நிபா வைரஸ் அறிகுறிகள் இருந்தால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர வேண்டும்.

மருத்துவக்கல்லூரி முதல்வர் அசோகன்

அதற்காக கோவை அரசு மருத்துவமனையில் நிபா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்க 30 படுக்கைகள் கொண்ட தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நிபா வைரஸ் குறித்து ஏதாவது சந்தேகம் இருந்தால் அரசு அறிவித்துள்ள 104 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்" என தெரிவித்தார்.

சு.சீனிவாசன்.      கோவை

கோவை அரசு மருத்துவமனையில் நிபா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்க 30 படுக்கைகள் கொண்ட தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை மற்றும் மருத்துக்கல்லூரி முதல்வர் அசோகன் தெரிவித்தார்.

கோவை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி முதல்வர் அசோகன் நீபா வைரஸ் முன்னெச்செரிக்கை நடவடிக்கை குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கேரளாவில் நிபா வைரசினால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுச்சுகாதார துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்தார். நிபா வைரஸ் வெளவால்கள் கடித்த பழங்களை உட்கொள்வதாலும், நிபா பாதித்தவர்களிடம் இருந்தும் பரவ வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் கேரளாவிற்கு சென்று வருவதால் நிபா வைரஸ் பரவாது எனவும், 
சுகாதாரமான பழங்களை உட்கொள்ள வேண்டும் எனவும், கைகளை கழுவி தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். 
கோவையில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை எனவும், 
மக்கள் அச்சமடைய தேவையில்லை எனவும் கூறிய அவர், 
நிபா வைரஸ் அறிகுறிகள் இருந்தால் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வர வேண்டும் என தெரிவித்தார். கோவை அரசு மருத்துவமனையில் நிபா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்க 30 படுக்கைகள் கொண்ட தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது எனவும்,  சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் உரிய பாதுகாப்போடு செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் நிபா வைரஸ் குறித்து ஏதாவது சந்தேகம் இருந்தால் அரசு அறிவித்துள்ள 104 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் எனவும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு நோய் தாக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.

Video in reporter app

TN_CBE_2_6_NIBA VIRUS_GH DEAN BYTE_9020856
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.