கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினத்தின் உத்தரவின்பேரில், பொள்ளாச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் செல்வி தமிழ்மணி தலைமையில், பொள்ளாச்சி சரகத்திற்குள்பட்ட பகுதிகளில் காவலர்கள் பான்மசாலா, குட்கா, போதைப் பொருள்கள், கள்ளச்சந்தையில் மது விற்பனை உள்ளிட்டவற்றைத் தடுக்கும்விதமாக பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வாகன ரோந்துப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த நிலையில் கிழக்கு காவல் நிலைய காவல் துறையினருக்கு ரகசிய தகவல் வந்ததன்பேரில், ஊஞ்சவேலம்பட்டியில் வாகன ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான நபரைப் பிடித்து விசாரணை செய்ததில், அவர் ஊஞ்சவேலாம்பட்டி முருகன் எனவும், பூசாரிபட்டி பகுதியிலிருந்து மதுபாட்டிகள் வாங்கி கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து முருகனிடம் 102 மதுபாட்டிகளைப் பறிமுதல்செய்து அவரை நீதிமன்றத்தில் முன்றிறுத்தி சிறையில் அடைத்தனர்.