ETV Bharat / state

மீண்டும் மீண்டுமா...? யூடியூபர் டிடிஎப் வாசன் சென்ற கார் மோதியதில் ஒருவர் காயம்...? - பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன்

சென்னையில் பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் சென்ற கார் இருசக்கர வாகனம் மீது மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்றவர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Youtuber
சென்னை
author img

By

Published : Jul 4, 2023, 4:55 PM IST

யூடியூபர் டிடிஎப் வாசன் சென்ற கார் விபத்தில் சிக்கியது

சென்னை: கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் யூடியூபர் டிடிஎப் வாசன். இவர், இருசக்கர வாகனத்தில் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து, அதை வீடியோவாகப் பதிவு செய்து தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு வந்தார். இவரது பைக் ரைடு வீடியோக்கள் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்ததால், இவர் யூடியூபில் பிரபலமானார். இவரை யூடியூபில் ஆயிரக்கணக்கானோர் பின்தொடர்கின்றனர். இவருக்கு சமூக வலைதளங்களில் ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

இவர் கடந்த ஆண்டு கோவையில் தனது ரசிகர்களை சந்தித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. டிடிஎப் வாசனைக் காண லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பலரும் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அதேபோல், இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றது, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியது, நம்பர் பிளேட் இல்லாமல் கார் ஓட்டியது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களிலும் சிக்கியுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவும் செய்துள்ளனர்.

அதேபோல், பிரபல யூடியூப் ஊடகவியலாளருக்கு மிரட்டல் விடுத்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்குகள் ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் தனது அடுத்தகட்ட இலக்காக திரைத்துறையை நோக்கி நகர்ந்துள்ளார் டிடிஎப் வாசன். 'மஞ்சள் வீரன்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: "வன்முறை என்னை விரும்புகிறது, என்னால் தவிர்க்க முடியாது'...TTF வாசனின் புதிய வீடியோ

இந்த நிலையில், டிடிஎப் வாசன் கார் ஓட்டி மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்திலிருந்து நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக இன்று(ஜூலை 4) காலை 6.30 மணியளவில் டிடிஎப் வாசன் மற்றும் அவரது நண்பர்கள் காரில் சென்றுள்ளனர். அப்போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, எதிரே சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபருக்கு லேசான காயம் ஏற்பட்டது. காரின் முன்பக்கம் சேதமடைந்தது. உடனடியாக டிடிஎப் வாசன் மற்றும் அவரது நண்பர்கள் காரை விட்டு இறங்கி ஆட்டோ பிடித்து கிளம்பி சென்றனர்.

இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விபத்து குறித்து பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் யாரும் காவல் நிலையத்திற்கு வந்து புகார் தரவில்லை எனவும், புகார் கொடுக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைந்தகரை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். காரை டிடிஎப் வாசன் ஓட்டி விபத்தை ஏற்படுத்தினாரா? அல்லது அவரது நண்பர்கள் ஓட்டினரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஜிபி முத்து கதறல்... டிடிஎப் வாசன் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.