கிழக்கு தாம்பரம், ரயில்வே குடியிருப்பை சேர்ந்தவர் செந்தில் (26). பெருங்களத்தூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் இன்று சேலையூர் காவல் நிலையம் எதிரில் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது நேற்று முந்தினம் தாம்பரம் புறநகர் பகுதியில் மழை பெய்ததால் சாலை முழுவதும் மழைநீர் தேங்கி இருந்தது.
அவர் மழைநீரை தாண்டி குதித்து உள்ளார்.அப்போது நிலை தடுமாறி கீழே விழாமல் இருப்பதற்காக அருகில் இருந்த இரும்பு மின் கம்பத்தை பிடித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கம்பத்தில் மின்கசிவு காரணமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே செந்தில் குமார் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சேலையூர் காவைதுறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைதனர்.இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: