ETV Bharat / state

சென்னையில் மரம் முறிந்து விழுந்து இளைஞர் படுகாயம்

பள்ளி வளாகத்தில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள் மீது மரம் முறிந்து விழுந்ததில், தலையில் பலத்த காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

மரம் முறிந்து விழுந்தது தொடர்பான காணொளி
மரம் முறிந்து விழுந்தது தொடர்பான காணொளி
author img

By

Published : Jul 12, 2021, 9:26 PM IST

சென்னை: அண்ணா சாலையில் அரசினர் மதரஸா இ-ஆஸம் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது. தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி திறக்கப்படவில்லை. பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கான விளையாட்டுப் பயிற்சிகள் மட்டுமே வழங்கப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட சிலர் நேற்று (ஜுலை 12) பள்ளி வளாகத்தில் கிரிக்கெட் விளையாடியுள்ளனர். அப்போது அங்கிருந்த மரம் முறிந்து இளைஞர்கள் மீது விழுந்துள்ளது. இதில் நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டது.

பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி

அதில் மூன்று இளைஞர்களுக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் ஒருவர் தலையில் பலத்த காயத்துடன், ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மரம் முறிந்து விழுந்தது தொடர்பான காணொலி

காவல், பள்ளிக் கல்வித் துறையினர் விசாரணை

விசாரணையில் படுகாயமடைந்தவர் திருவல்லிக்கேணி அசுதீன் கான் தெருவைச் சேர்ந்த செய்யது ரியாஸ் (35) எனத் தெரியவந்தது. இவர் இசைக்கருவிகளை விற்பனை செய்துவருகிறார். இது தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

இந்நிலையில் பள்ளி வளாகத்திற்குள் இளைஞர்கள் அத்துமீறி நுழைந்தது எப்படி, விபத்து நிகழ்ந்தது எப்படி என்பது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கஞ்சா விற்கும் கும்பல்களுக்கிடையே மோதல்? பதறவைக்கும் சிசிடிவி காட்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.