சென்னை: புளியந்தோப்பு பேரக்ஸ் சாலை அம்பேத்கர்நகர் பகுதியைச் சேர்ந்த சாதிக் பாஷா(23) என்பவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இன்று (டிச.18) சாதிக் பாஷா தனது இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து சென்றபடி எழும்பூர் பழைய காவல் ஆணையர் அலுவலகம் அருகே சென்றார்.
அப்போது அவ்வழியாக, பின்னால் அதிவேகமாக வந்த மாநகராட்சி குப்பை லாரி, இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், சாதிக் பாஷா லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே, உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து சென்ற அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாநகராட்சி குப்பை லாரி ஓட்டுநர் கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்லு(43) என்பவரை கைது செய்து போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மெட்ரோ குடிநீர் குழாயில் உடைப்பு: வீணாக சென்ற குடிநீர்!