ETV Bharat / state

வடிவேலு பாணியில் சூலாயுதத்தை திருடி நாடகமாடிய இளைஞர் கைது!

author img

By

Published : Jan 5, 2022, 10:38 AM IST

பொள்ளாச்சி அருகே நகைச்சுவை நடிகர் வடிவேலு பட பாணியில் சூலாயுதத்தை திருடி சாமி வந்ததுபோல் நாடகமாடிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

வடிவேலு பாணியில் சூலாயுதத்தை திருடி நாடகமாடிய இளைஞர் கைது!
வடிவேலு பாணியில் சூலாயுதத்தை திருடி நாடகமாடிய இளைஞர் கைது!

கோவை: பொள்ளாச்சி அருகே ஆனைமலை சேத்துமடை அண்ணா நகரில் பிரசித்தி பெற்ற உச்சிமாகாளி அம்மன் கோயில் உள்ளது. இக்கோவிலில் அதே பகுதியை சேர்ந்த குமார் (45) என்பவர் பூசாரியாக உள்ளார். இவர் வழக்கம்போல் நேற்று முன்தினம் (ஜன. 3) காலை கோயிலில் பூஜை செய்ய சென்றுள்ளார்.

அப்போது கோயில் கருவறையின் கதவை உடைத்து இளைஞர் ஒருவர் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பூசாரி, அக்கம்பக்கத்தினரை அழைத்துக் கொண்டு மீண்டும் கோயிலுக்குள் நுழைந்துள்ளார். அப்போது அம்மனின் சூலாயுதத்தைத் திருடிக் கொண்டு வெளியே வந்த இளைஞர், மக்கள் ஒன்று கூடி வருவதைக் கண்டு பயந்துள்ளார்.

உடனடியாக சுதாரித்துக் கொண்ட இளைஞர், கையில் இருக்கும் சூலாயுதத்தை கெட்டியாக பிடித்து கொண்டு சாமியாடினார். தொடர்ந்து நான் கேட்பதை தாருங்கள் என மக்களிடம் அவர் கேட்டுள்ளார். இதனை நம்ப மறுத்த மக்கள் இளைஞரின் அருகில் செல்ல முயன்றுள்ளனர். இதனால் பயந்து போன இளைஞர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

ஒருவழியாக பொதுமக்கள் இளைஞரை மடக்கிப்பிடித்து ஆனைமலை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான ஜேசுதாஸ் என்பது தெரியவந்தது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இளைஞரை சிறையில் அடைத்தனர். பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த 'சுந்தரபுருஷன்' திரைப்படத்தில் இதே போன்றதொரு காட்சியில் வடிவேலு திருடனாக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. வடிவேலு பட பாணியில் இளைஞர் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஆபாசமாகப் பேசியதாகப் புகார் - ரவுடி பேபி சூர்யா கைதின் முழுப்பின்னணி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.