சென்னை வண்டலூர்-மீஞ்சூர், தாம்பரம்-மதுரவாயல், பூவிருந்தவல்லி-திருப்பதி நெடுஞ்சாலைகளில் வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதுதொடர்பாக நசரத்பேட்டை காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் குற்றச்சம்பவங்கள் நடைபெற்ற நெடுஞ்சாலைகளில் சுமார் 60 கிலோ மீட்டர் காவல் துறையினர் பயணம் செய்து சிசிடிவி கேமரா பதிவை சேகரித்தனர். அதை சோதனை செய்ததில் பூவிருந்தவல்லி அடுத்த கூடப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார்(24), அபினேஷ்(21), நாயுடு(என்ற)சூர்யா(22), செல்வகுமார் (20), சக்திவேல்(20), ஆகியோர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் இளைஞர்கள் போதைக்கு அடிமையானதால் வழிப்பறியில் தொடர்ந்து ஈடுபட்டனர். சென்னையின் மெயின் பகுதிகளில் திருடினால் மாட்டிக் கொள்வோம் என்பதால் நெடுஞ்சாலைகளில் செல்வோர்களிடம் வழிபறி செய்தனர் என்பது தெரியவந்தது.
தற்போது வழிப்பறி தொடர்புடைய ஐந்து இளைஞர்களையும் துப்பாக்கி முனையில் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து மூன்று இருசக்கர வாகனம், நான்கு பவுன் நகைகள், கத்தி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: கஞ்சா விற்பனையை தடுக்க முயன்ற பெண் மீது தாக்குதல்...!