சென்னை குரோம்பேட்டை அம்பாள் நகர் 1ஆவது தெருவில் வாடகை வீட்டில் வசித்துவருபவர் திருநாவுக்கரசு, இவருடைய மகன் நவநீதகிருஷ்ணன் (32) எம்.எஸ்.சி கணினி அறிவியல் படித்த பட்டதாரி ஆவார். நவநீதகிருஷ்ணனுக்கு நீண்ட மாதங்களாகவே வேலை கிடைக்காமல் இருந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று தனியார் நிறுவனம் ஒன்றிற்கு வேலை கேட்டு சென்றுள்ளார். அங்கு அவருக்கு வேலை கிடைக்கவில்லை, இதனால் நவநீதகிருஷ்ணன் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்றிரவு படுக்கையறைக்கு சென்ற அவர் இன்று காலை வெகு நேரமாகியும் கதவை திறக்காததால் அவரின் தந்தை கதவை திறந்து பார்த்தபோது, நவநீதகிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதைக் கண்டு அவரின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
![தற்கொலை செய்யும் எண்ணமிருந்தால் ஒரு ஐந்து நிமிடம் இவர்களுடன் செலவிடுங்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10328937_asss.jpg)
பின்னர் இதுகுறித்து குரோம்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவலர்கள் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:சென்னை துறைமுகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.97 லட்சம் மோசடி - சிபிஐ வழக்குப் பதிவு !