ETV Bharat / state

காவலரை தாக்கிய இளைஞர்: மடக்கிப் பிடித்த பொதுமக்கள்! - காவலரை தாக்கிய இளைஞர் கைது

சென்னை: அம்பத்தூர் அருகே காவலரைத் தாக்கிய இளைஞரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள், அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Young man arrested for attacked police
Young man arrested for attacked police
author img

By

Published : May 12, 2021, 3:24 PM IST

சென்னை அம்பத்தூரை அடுத்த கொரட்டூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் சரவணன் (39). இவர், நேற்றிரவு (மே 11) கோல்டன் காலனி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக ஒரு இளைஞர் நடந்து சென்றுள்ளார். இதனையடுத்து, சரவணன் அந்த இளைஞரை வழிமறித்து விசாரணை நடத்தினார். அப்போது, அந்த இளைஞர் திடீரென சரவணனை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில், அவருக்கு வலது கண் புருவத்தில் படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கிருந்து தப்ப முயன்ற இளைஞரை அங்கிருந்த பொதுமக்கள் சுற்றி வளைத்துப் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர், பொதுமக்கள் அவரை கொரட்டூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மேலும், படுகாயமடைந்த காவலர் சரவணனை பாடியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இளைஞரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இளைஞர் பாடி, வன்னியர் தெருவைச் சார்ந்த தினேஷ்குமார் (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவல் துறையினர், அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.