ETV Bharat / state

பொறியியல் படிப்புக்கு மே 2 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு மே மாதம் 2ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

உயர்கல்வித்துறை
author img

By

Published : Apr 21, 2019, 3:17 PM IST

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு கடந்தாண்டு முதல் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இந்தாண்டிற்கான பொறியியல் கலந்தாய்வு ஜூன் மாதம் 20ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, மே மாதம் 2ஆம் தேதி முதல் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும், கடைசி நாள் மே மாதம் 31ஆம் தேதி என்றும், ஜூன் 3ஆம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்படும் என்றும், ஜூன் 17ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து ஜூன் 20ஆம் தேதி பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் இணையதள முகவரி நாளை அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:பிஇ பிடெக் பொறியியல் படிப்பில் சேர
மே 2 ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பம்

Body:சென்னை, பிஇ பிடெக் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கு மே இரண்டாம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பிஇ பிடெக் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான அறிவிப்பு ஏப்ரல் 22 ந் தேதி வெளியிடப்படும்.
அதனைத் தொடர்ந்து மே மாதம் இரண்டாம் தேதி முதல் 31ஆம் தேதி வரை இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மாணவர்களுக்கான ரேண்டம் எண் ஜூன் மாதம் 3 ம் தேதி வெளியிடப்படும்.
தமிழகத்தில் அமைக்கப்படும் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை உதவி மையங்களில் ஜூன் மாதம் ஆறாம் தேதி முதல் 16ம் தேதி வரை மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.
மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் மாதம் 17 ஆம் தேதி வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் மாதம் 20-ம் தேதி முதல் 22ம் தேதி வரை ஆன்லைன் மூலம் நடத்தப்படும்.
பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஆன்-லைன் மூலம் ஜூலை மாதம் 3ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடத்தப்படும்.
தொழிற்கல்வி மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூன் மாதம் 25ஆம் தேதி முதல் 26ம் தேதி வரை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தால் மாணவர்களை நேரில் அழைத்து நடத்தப்படும்.
மாணவர்களுக்கான துணை கலந்தாய்வு ஜூலை மாதம் 29-ம் தேதியும், ஆதிதிராவிடர் அருந்ததியர் பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் நிரம்பாத இடங்களில் ஆதிதிராவிடர் மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வு ஜூலை முப்பதாம் தேதி நேரடியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.