சென்னையில் கரோனா ஊரடங்கில் பணிபுரிந்துவரும் காவலர்களுக்கு மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
அதனடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலையம், சிறுவர் நல காவல் பிரிவு உள்பட பல்வேறு பிரிவுகளில் பணிப்புரிந்து வரும் 500 பெண் காவலர்களுக்கு இணையதளம் மூலமாக இன்று (ஜூலை16) காலை 11 மணி முதல் 1 மணி வரை யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டன.
அதில் மூச்சு திணறல், நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்டப் பிரச்சனைகளிலிருந்து விடுபட ஆசனங்கள் கற்று தரப்பட்டன. மேலும் அவர்களுக்கு மன அழுத்தத்தை போக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளவும் இயற்கை உணவு முறைகள் குறித்த ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. அதனை யோகா பயிற்சியாளர் பிரியதர்சினி, திக்ஷா ஆகியோர் வழங்கினர்.
இதையும் படிங்க: 'அழகை தக்க வைத்து கொள்ள ஆகச்சிறந்த வழி யோகா' - பாலிவுட் நடிகைகள்