ETV Bharat / state

"ஏற்றமிகு ஏழு திட்டங்கள்" கீழ் புதிய திட்டங்களை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்! - Yetramigu yezhu

மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 44 புதிய மருத்துவமனைக் கட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு அரசுப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கும், கருணை அடிப்படையிலும் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

ஏற்றமிகு ஏழு திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

author img

By

Published : Feb 28, 2023, 1:36 PM IST

சென்னை: சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றமிகு ஏழு திட்டங்களை தொடங்கி வைத்தார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ஆயிரத்து 136 கோடியே 32 லட்ச ரூபாய் மதிப்பில் 44 புதிய மருத்துவமனைக் கட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸடாலின் அடிக்கல் நாட்டினார்.

மேலும், பல்வேறு அரசுப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கும், கருணை அடிப்படையில் தேர்வாணவர்களுக்கும் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

"ஏற்றமிகு ஏழு திட்டங்கள்: ஊட்டச் சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம், திருநங்கையர்களுக்கான மாதாந்திர உதவித் தொகையை 1,000 ரூபாயில் இருந்து 1,500 ரூபாயாக உயர்த்தி வழங்கும் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் விரிவாக்கம் செய்யும் திட்டம்,

சென்னை மாநகரப் பகுதியில் கழிவுநீர் அகற்றும் பணிகளை நவீனப்படுத்தி, தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களை தொழில்முனைவோர்களாக ஒருங்கிணைத்து மேற்கொள்வதற்கான சிறப்புத் திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டம் ஆகியவை ஏற்றமிகு ஏழு திட்டங்களின் அம்சங்களாகும்" என்றார்.

சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம்: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் “ஊட்டச்சத்தை உறுதிசெய்” திட்டத்தின் கீழ், 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடுடைய 1, 11 மற்றும் 216 குழந்தைகளின் ஊட்டச்சத்தினை மேம்படுத்தும் வகையில் 8 வாரங்களுக்கு (56 நாட்கள்) சிறப்பு உணவாக, உடனடியாக உட்கொள்ளும் சிகிச்சை உணவு அளிக்கவும்,

சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம்
சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம்

0 முதல் 6 மாதம் வரையுள்ள 11,917 கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடுடைய குழந்தைகளின் தாய்மார்களுக்கு, அவர்களின் ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்தி குழந்தைகளுக்குத் தேவையான தாய்ப்பால் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் 2 ஊட்டச்சத்து பெட்டகங்களும் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக, முதலமைச்சர் 5 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.

திருநங்கையர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு: திருநங்கைகளுக்கு கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதற்காகவும், சமுதாயத்தில் அவர்களுக்கான அங்கீகாரத்தை ஏற்படுத்தவும், மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி “திருநங்கையர்” என்று அவர்களுக்கு பெயர் சூட்டி, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாட்டில், 2008ஆம் ஆண்டு திருநங்கைகள் நல வாரியத்தை அமைத்தார்.

திருநங்கைகள் நல வாரியத்தின் மூலம் திருநங்கைகளுக்கு அடையாள அட்டை, குடும்ப அட்டை, சுயதொழில் தொடங்க மானியத் தொகை, சுயஉதவிக் குழு பயிற்சி, காப்பீட்டுத் திட்ட அட்டை, இலவச தையல் இயந்திரங்கள் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன.

திருநங்கையர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு
திருநங்கையர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு

இதன் ஒரு பகுதியாக, தங்களது வாழ்வாதார செலவுகளுக்கு வருமானம் ஈட்ட இயலாத 40 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற ஏழ்மை நிலையிலுள்ள திருநங்கைகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. திருநங்கைகளுக்கு தற்போது வழங்கப்படும் 1,000 ரூபாய் ஓய்வூதியத் தொகையை 1,500 ரூபாயாக உயர்த்தி வழங்கிடும் அடையாளமாக, 3 திருநங்கைகளுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதிய தொகைக்கான ஆணைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: பொதுமக்களால் வெகுவாக வரவேற்கப்பட்டு வரும் இத்திட்டத்தினை மேலும் விரிவுபடுத்தும் வகையில், திருச்சி, காஞ்சிபுரம், கடலூர், தஞ்சாவூர், கும்பகோணம், வேலூர், ஆவடி, மதுரை, சேலம், திண்டுக்கல், திருநெல்வேலி, ஈரோடு, நாகர்கோவில், கோயம்புத்தூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாநகராட்சிகளிலும், மேட்டுப்பாளையம், மதுக்கரை, கோவில்பட்டி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருவத்திபுரம், ஆற்காடு, ஆம்பூர், வாணியம்பாடி,

புதுக்கோட்டை, பெரம்பலூர், ஜெயங்கொண்டம், நாகப்பட்டினம், மன்னார்குடி, சீர்காழி, நாமக்கல், திருச்செங்கோடு, பரமக்குடி, காரைக்குடி, நந்திவரம் கூடுவாஞ்சேரி மற்றும் மறைமலைநகர் ஆகிய நகராட்சிகளிலும் என மொத்தம் 36 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 433 பள்ளிகளில் பயிலும் 56,098 மாணவர்கள் பயன்பெறும் வகையில், விரிவுபடுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை தொடங்கி வைக்கும் விதமாக 3 மாணவர்களுக்கு காலை உணவுப் பெட்டகத்தை ஸ்டாலின் வழங்கினார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்: சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் பாதாள சாக்கடை பராமரிப்பு மற்றும் கழிவுநீர் அகற்றும் பணிகளில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்களின் உயிரிழப்பை முற்றிலும் தவிர்ப்பதற்காக, இப்பணிகளை நவீன இயந்திரங்கள் மூலம் நிறைவேற்றிட, தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களை தொழில்முனைவோர்களாக ஒருங்கிணைத்து செயல்படுத்திடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் (CMWSSB) மற்றும் தலித் இந்திய வர்த்தக மற்றும் தொழிற்சங்கம் (DICCI) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன்மூலம், உயிரிழந்த தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினரை அடையாளம் கண்டு அவர்களுக்கு தொழில் தொடங்குவதற்குத் தேவையான அறிவுரைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு தேவையான வழிமுறைகளை வழங்கி, ஒப்பந்தப்புள்ளிகளில் பங்கேற்க அனைத்து பயிற்சிகளையும் அளித்து, அரசு திட்டங்களிலிருந்து மானியத்தைப் பெற்று தொழில் முனைவோராக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், தூய்மைப் பணியாளர்கள் கழிவுநீர் குழாய்களில் மேற்கொள்ளும் பராமரிப்பு பணிகளை நவீன இயந்திரங்களைக் கொண்டு கையாளுவது, நச்சுத் தொட்டிகளை பாதுகாப்பாக சுத்தப்படுத்தத், தேவையான இயந்திரங்களை கையாள்வது உள்ளிட்ட பயிற்சிகளை வழங்கி அவர்களை துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவன அமைப்பாக மாற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இத்திட்டம் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் மூலமாக சென்னை பெருநகர பகுதியில் செயல்படுத்தப்படவுள்ளது.

மருத்துவக் கட்டடங்களுக்கு அடிக்கல்: ஜெயங்கொண்டம் (அரியலூர்), தாம்பரம்(செங்கல்பட்டு), பழனி (திண்டுக்கல்), திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி), பரமக்குடி (ராமநாதபுரம்), திருத்தணி (திருவள்ளூர்), திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்), காங்கேயம் (திருப்பூர்), குடியாத்தம் (வேலூர்), திண்டிவனம் (விழுப்புரம்), அருப்புக்கோட்டை (விருதுநகர்) ஆகிய அரசு மருத்துவமனைகள் 550.85 கோடி ரூபாய் செலவில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்திடவும், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயர் சிறப்பு சிகிச்சை கட்டடம்,

தூத்துக்குடி மாவட்டம் - திருசெந்தூர் அரசு மருத்துவமனையில் தாய் சேய் நலப் பிரிவு மற்றும் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவுக் கட்டடம், திருப்பத்தூர் மாவட்டம் - ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, எக்ஸ்ரே பிரிவு கட்டடம் என 206.82 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள கட்டடங்கள், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,

மதுரை மாவட்டம் - மேலூர், கிருஷ்ணகிரி மாவட்டம் - ஊத்தங்கரை மற்றும் சென்னை மாவட்டம் - சோளிங்கநல்லூர் ஆகிய அரசு மருத்துவமனைகளில் 131 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 50 படுக்கைகள் மற்றும் 100 படுக்கைககள் கொண்ட அவசரகால கவனிப்பு பிரிவுக் கட்டடங்கள், சென்னை - அரசு கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனை, ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனை, கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தருமபுரி மாவட்டம் - பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, சென்னை - தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனை, திருப்பூர் மாவட்டம் - அவினாசி அரசு மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் 120.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள புதிய தாய் சேய் நலப் பிரிவுக் கட்டடங்கள், காஞ்சிபுரம் மாவட்டம் - காரப்பேட்டை,

அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதலாக கட்டப்பட உள்ள மூன்று தளங்கள், ராமநாதபுரம் மாவட்டம் - பரமக்குடி அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடங்கள், அரியலூர் மாவட்டம் - ஜெயம்கொண்டம் அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த அவசரகால சிகிச்சை பிரிவுக் கட்டடம் என 13 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான கட்டடங்கள்,

கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோயம்புத்தூர் மாவட்டம் - பொள்ளாச்சி, திருவண்ணாமலை மாவட்டம் - செய்யார், சென்னை - சைதாப்பேட்டை மருத்துவமனை, திருநெல்வேலி மாவட்டம் - வள்ளியூர், திண்டுக்கல் மாவட்டம் - பழனி, திருச்சி மாவட்டம் - மணப்பாறை, மதுரை மாவட்டம் - மேலூர் ஆகிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய ஒருங்கிணைந்த ஆய்வகங்கள்,

கடலூர் மாவட்டம் - மஞ்சகொல்லை மற்றும் ஒரங்கூர், திண்டுக்கல் மாவட்டம் - ஆடலூர் பன்றிமலை, மார்க்கம்பட்டி மற்றும் சிவகங்கை மாவட்டம் - சங்கராபுரம் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய கட்டடங்கள் என மொத்தம் ஆயிரத்து 136 கோடியே 32 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 44 மருத்துவக் கட்டடங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா: வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் அமைத்துத் தருவதற்கு ஏதுவாக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலம் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கிடும் திட்டத்தினை தொடங்கி வைக்கும் விதமாக, 5 மாற்றுத்தினாளிகளுக்கு வீட்டுமனைப் பாட்டாக்களை முதலமைச்சர் வழங்கினார்.

பணி நியமன ஆணைகள்: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் குடும்ப நல இயக்குநரகத்திற்காக வட்டார சுகாதார புள்ளியியளாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 192 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்கும், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்ககத்திற்காக கணக்கிடுபவர் மற்றும் தடுப்பூசி பண்டகக் காப்பாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 28 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 2 நபர்களுக்கும்,

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் உதவி இயக்குநர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 3 நபர்களுக்கும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர், வருவாய் உதவியாளர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், பணி ஆய்வர் ஆகிய பணியிடங்களுக்கு 50 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்கும் பணிநியமன ஆணைகளை அவர் வழங்கினார்.

இந்த விழாவில், அமைச்சர்கள் கே.என்.நேரு, மு.பெ.சாமிநாதன், கீதா ஜீவன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வைகோ, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: TNEB Aadhaar Link: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.