கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமையில் தளர்வில்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இன்று (ஆக. 30) தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், கடைகள் உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. மேலும் டாஸ்மாக் கடைகளும் தமிழ்நாட்டில் முழுமையாக மூடப்பட்டுள்ளன. இதனால், மதுப் பிரியர்கள் நேற்றே (ஆக. 29) ஊரடங்கு நாளான இன்றைக்கும் சேர்த்து மது வாங்கியுள்ளதால் அதன் விற்பனை வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை உள்பட நேற்று (ஆக. 29) ஒரு நாளில் மட்டும் ரூ. 243 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளதாக டாஸ்மாக் அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சேலத்தில் 47 கோடிக்கும், மதுரையில் 49 கோடிக்கும், திருச்சியில் 48 கோடிக்கும், சென்னையில் அதிகபட்சமாக 52 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க... தமிழ்நாட்டில் பொதுப்போக்குவரத்து இயங்குமா? - முதலமைச்சர் ஆலோசனை