ETV Bharat / state

1 கோடி குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை: யாருக்கெல்லாம் கிடைக்கும்?

ஏறத்தாழ ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டம் வழங்கப்படும் எனவும்; விரைவில் இந்த திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

ஒரு கோடி குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டம் வழங்கப்படும் - மு.க.ஸ்டாலின்

author img

By

Published : Mar 27, 2023, 5:51 PM IST

Updated : Mar 28, 2023, 6:50 AM IST

சென்னை: கடந்த மார்ச் 20ஆம் தேதி 2023-24ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். திமுக தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகைக்கான அறிவிப்பை வெளியிட்டார். மேலும் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிக்கு மட்டுமே மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் எனத் தெரிவித்தது சர்ச்சையை எழுப்பியது.

இதனால் கடந்த ஒரு வார காலமாக எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் மகளிர் உரிமைத்தொகை குறித்து கடுமையாக விமர்சித்தனர். இதனால் பொதுமக்கள் மத்தியில் இந்த திட்டம் குறித்து கடும் குழப்பம் ஏற்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நிதிநிலை மற்றும் வேளாண் நிதிநிலை குறித்த விவாதம் நடைபெற்றது. இதில் மகளிர் உரிமைத்தொகை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.

அப்போது பேசிய அவர், ''மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நூற்றாண்டில் மகத்தான திட்டமாக மகளிர் உரிமைத்தொகை திட்டம் பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டை வளமான வலிமையான மாநிலமாக மாற்ற மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது. தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் மட்டுமல்லாமல் அறிவிக்கப்படாத வாக்குறுதிகளும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சமூகத்தில் வெற்றி பெறக்கூடிய ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும் பெண் இருக்கிறார். தாய், மனைவி, சகோதரி என ஆணுக்குப் பின்னால் பெண் இருக்கிறார். பெண்களை கருத்தில்கொண்டு இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. Universal basic Income என்ற அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் வறுமை குறைய வாய்ப்பு உள்ளது. குழந்தைகள் கல்வி மேம்படும். இந்தத் திட்டத்தின் மூலம் பெண்களின் தன்னம்பிக்கை உயரும் என்ற அடிப்படையிலும் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக இந்த நிதி நிலையில் 7000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் எவ்வளவு பேர் பயன் பெறுவார்கள் என பல பேர் மனக் கணக்கு போட்டு வருகிறார்கள். மகளிர் உரிமைத்தொகை திட்டம் இரண்டு நோக்கங்களை கொண்டது. பெண்களுக்கு கொடுக்கும் அங்கீகாரம், ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை என்பது பெண்களின் வறுமையை ஒழித்து, சுயமரியாதையோடு பெண்கள் வாழ்வதற்கு வித்திடும்.

இந்த திட்டம் என்பது தேவைப்படும் குடும்பத் தலைவிகள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும். நடைபாதையில் வணிகம் செய்யும் மகளிர், மீனவப் பெண்கள், கட்டுமானத்தொழிலில் ஈடுபடும் மகளிர் எனப் பல்வேறு இடங்களில் தங்களது விலைமதிப்பில்லா உழைப்பை வழங்கி வரும் பெண்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள்.

விரைவில் இந்தத் திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும். தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்பட்ட சமூக நீதி திட்டங்களின் மாபெரும் திட்டங்களாக இந்த மகத்தான உரிமை திட்டம் இருக்கும். ஏறத்தாழ ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு இந்த உதவித்தொகை திட்டம் வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்: என்னென்ன திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?

Last Updated : Mar 28, 2023, 6:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.