ETV Bharat / state

'ரவுடி பேபி சூர்யா, ஜி.பி. முத்து உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுங்க' - மகளிர் அமைப்பு - chennai latest news

சமூக வலைதளமான யூ-ட்யூபில் பாலுணர்வைத் தூண்டும் வகையில் உடையணிந்தும், ஆபாசமாகப் பேசியும் காணொலிகளைப் பதிவேற்றம் செய்து வரும் ரவுடி பேபி சூர்யா, திருச்சி சாதனா, ஜி.பி. முத்து உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க, தமிழ்நாடு ஒருங்கிணைந்த மகளிர் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மகளிர் அமைப்பு
மகளிர் அமைப்பு
author img

By

Published : Jul 4, 2021, 6:42 PM IST

சென்னை: தமிழ்நாடு ஒருங்கிணைந்த மகளிர் அமைப்பு, சமூக ஆர்வலர்கள் ஆகியோர் இணைந்து இணையத்தை தவறாகப் பயன்படுத்தி ஆபாச காணொலிகளை பதிவேற்றும் ரவுடி பேபி சூர்யா, ஜி.பி. முத்து, திருச்சி சாதனா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் இன்று (ஜுலை 4) புகாரளிக்க வந்திருந்தனர்.

ஆனால், இணையதளம் வாயிலாகப் புகார் அளிக்கும்படி அறிவுறுத்திய காவல் துறையினர், அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த மகளிர் அமைப்பினர் பேசுகையில், 'இணையதளம் மூலமாக வணிகம், கல்வி, விளையாட்டு எனத் திறமைகளை வெளிக்காட்டி, அதன்மூலம் நல்ல வாய்ப்புகளை உருவாக்கிட அனைவரும் இணையதளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆபாச பேச்சு, உடை

இதற்கு மாறாக யூ-ட்யூபர் ரவுடி பேபி சூர்யா, திருச்சி சாதனா, சந்தான லட்சுமி, ஜி.பி. முத்து உள்ளிட்டோர் இணையதளத்தை மிகவும் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இவர்கள் பதிவிடும் காணொலிகளில் அநாகரிகமான ஆபாச பேச்சுகள், பாலுணர்வைத் தூண்டும் வகையிலான உடையணிந்த நடன காணொலிகளே இடம் பெறுள்ளன.

மாணவர் மனநிலை பாதிப்பு

தற்போது கரோனா காலம் என்பதால் பள்ளி மாணவ, மாணவியர்கள் அனைவரும் இணையதளம் வழியாகத்தான் கல்வி கற்று வருகின்றனர்.

இத்தகைய யூ-ட்யூபர்களின் காணொலிகளை பார்க்கும் மாணவர்களின் மனநிலை பாதிக்கப்படும். திருப்பூரில் இயங்கும் ஒரு அமைப்பு கொடுத்தப் புகாரின் பேரில், ரவுடி பேபி சூர்யா மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

யூ-ட்யூப் சேனல்கள் முடக்கம்

அதேபோல் ஜி.பி. முத்து, திருச்சி சாதனா, சந்தானலட்சுமி, காத்து கருப்பு கலை உள்ளிட்ட இணையதளத்தை தவறாகப் பயன்படுத்தும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து, யூ-ட்யூப் சேனல்களை முடக்க வேண்டும்.

டிஜிபி சைலேந்திரபாபு வெளியூர் சென்றிருப்பதால், புகாரினை இணையம் மூலமாக அளிக்குமாறு காவல் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்'' என்றார்.

இதையும் படிங்க: சமூக வலைதளத்தில் ஆபாச குறுஞ்செய்திகள்: சனம் ஷெட்டி புகார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.