சென்னை: வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் பால ஈஸ்வரி (43). இவரது மகன் லட்சித் நாராயணன் (8). பால ஈஸ்வரியின் கணவர் வில்லிவாக்கத்தில் செல்போன் கடை நடத்திவந்தார். இவர் கடந்த மே மாதம் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த பால ஈஸ்வரி தனது மகனுடன் சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் ஹவுசிங் காலனியில் வசித்துவரும் அவரின் அக்கா முத்துலட்சுமி வீட்டில் தங்கியிருந்தார்.
