ETV Bharat / state

இலவச மகளிர் பேருந்து திட்டம் மூலம் மாதம் 1012 ரூபாய் வரை சேமிக்கும் பெண்கள்!! - chennai

இலவச மகளிர் பேருந்து பயணத்திட்டம் மூலமாக பல்வேறு வகையிலான பணிகளுக்கு செல்லும் பெண்கள் மாதம் 756 ரூபாய் முதல் 1012 ரூபாய் வரை சேமிக்கின்றனர் என மாநில திட்டக்குழு மேற்கொண்ட ஆய்வறிக்கையில் தகவல் கிடைத்துள்ளது

இலவச மகளிர் பேருந்து திட்டம் மூலம் மாதம் 1012 ரூபாய் வரை சேமிக்கும் பெண்கள்

author img

By

Published : Nov 26, 2022, 7:42 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசு பெண்கள் மேம்பாட்டிற்காக உள்ளூர் அரசு பேருந்துகளில் இலவச பயணம் அறிவித்தது. இந்தத் திட்டத்தின் பலன் எந்த அளவுக்கு பெண்களை சென்றடைந்துள்ளது என்பதனை ஆய்வு செய்யும் வகையில் நாகப்பட்டினம், மதுரை, திருப்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலும், சென்னையிலும் தமிழ்நாடு திட்டக்குழு ஆய்வு மேற்கொண்டது.

நாகப்பட்டினத்தில் 416 பெண்களிடமும் மதுரையில் 422 பெண்களிடமும் திருப்பூரில் 437 பெண்களிடமும் தகவல் பெறப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதன் அறிக்கை முதலமைச்சரிடம் நேற்று சமர்பிக்கப்பட்டது.

பல்வேறு வகையான பணிகளுக்கு செல்லும் பெண்களிடம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் நாகப்பட்டினம், மதுரை, திருப்பூர், ஆகிய மூன்று மாவட்டங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக மாநில திட்டக்குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மகளிர் இலவச பேருந்து பயணத்திட்டம் மூலம் பயணிக்கக் கூடிய பெண்களில் 48% பெண்கள் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 52% பெண்கள் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

40% பெண்கள் குடும்பத்தாரை சார்ந்து இல்லாமல் சுயமாக வேலைக்கு சென்று திரும்ப மகளிர் இலவச பேருந்து பயண திட்டம் உதவியாக உள்ளது. பணிக்குச் செல்லும் பெண்கள் இலவச பேருந்து பயணம் திட்டம் மூலம் சராசரியாக ஒரு மாதத்திற்கு 888 ரூபாய் சேமிக்க முடிகிறது.

இதேபோல் பல்வேறு வகையான பணிக்கு செல்லக்கூடிய பெண்கள் மாதம் 756 ரூபாயிலிருந்து 1012 ரூபாய் வரையிலும் சேமிக்க முடிகிறது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இதேபோல் சென்னையில் பிராட்வே - கண்ணகி நகர், கோயம்பேடு - திருவொற்றியூர், தாம்பரம் - செங்கல்பட்டு ஆகிய வழித்தடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தில் பெண்கள் மாதத்திற்கு 50 முறை மாநகரப் பேருந்தில் பயணிக்கின்றனர். இதன் மூலம் சராசரியாக மாதம் 858 ரூபாய் சேமிக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

மகளிர் இலவச பேருந்து பயணத்திட்டத்தை பயன்படுத்தக்கூடிய பெண்களின் மாத சம்பளம் சராசரியாக மாதம் 12,000 உட்பட்டதாக இருப்பதும், இந்தத் திட்டத்தின் மூலம் சேமிக்க கூடிய தொகையினை குடும்பத்தின் அத்தியாவசிய தேவைக்கு பெண்கள் பயன்படுத்துவதாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இலவச பேருந்துகள் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக பயணிகள் உணர்வதாகவும், இதன் காரணமாக பணம் செலுத்தி பயணிக்க கூடிய மற்றும் வேகமாக செல்லும் மாற்று போக்குவரத்தை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு பெண்கள் தள்ளப்படுவதாகவும் இந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Viral Video - ஆசிரியை v/s மாணவி மோதல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.