செங்கல்பட்டு அடுத்த பரனுரை சேர்ந்த கூலி வேலை செய்யும் பெண்(40) ஒருவர், குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு (ஜனவரி 9) பல்லாவரத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயிலில் பரனுருக்கு சென்ற அந்த பெண், மது போதையில் ரயிலிலேயே தூங்கினார்.
இதனையடுத்து, அந்த மின்சார ரயில் மீண்டும் கடற்கரைக்கு வந்து அதன் பின்னர் தாம்பரம் வந்தடைந்த நிலையில், பராமரிப்பு பணிக்காக தாம்பரம் மின்சார ரயில் பராமரிப்பு நிலையத்தில் ரயிலை நிறுத்திவிட்டு ஓட்டுநர் சென்றுவிட்டார். அங்கு இரவு பணிக்கு வந்த தற்காலிக ஊழியர்கள் சுரேஷ், அப்துல் அஜிஸ் ஆகிய இருவரும் அப்பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்து விட்டு வெளியே சொல்லக்கூடாது என மிரட்டி அனுப்பியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, அப்பெண் தாம்பரம் ரயில்வே காவல் துறையிடம் அளித்த புகாரின் பேரில், ஊழியர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.