ETV Bharat / state

பாஜக தலைவர் வீட்டு முன் அக்கட்சி கொடியை தூக்கிலிட்டு போராட்டம் நடத்திய பெண் கைது! - எல். முருகன்

சென்னை: கோயம்பேட்டில் உள்ள பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் வீடு அருகே அக்கட்சிக் கொடியை தூக்கிலிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை காவல் துறையினர் கைது செய்தனர்.

பாஜக தலைவர் வீட்டு முன் அக்கட்சி கொடியை தூக்கிலிட்டு போராட்டம் போராட்டம் நடத்திய பெண் கைது...!

author img

By

Published : Sep 23, 2020, 9:30 PM IST

மேற்கு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நர்மதா, அவ்வப்போது நூதன போராட்டங்களில் ஈடுபடுவார். சில ஆண்டுகளுக்கு முன்பு பட்டினம்பாக்கத்தில் உள்ள அமைச்சர் ஜெயக்குமார் வீட்டில் நண்டுவிடும் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார்.

இந்நிலையில் இன்று (செப். 23) கோயம்பேடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் உள்ள எல். முருகன் வீட்டின் முன்பு பாஜக கொடியை தூக்கில் இடும் போராட்டத்தில் ஈடுபட முயன்றார். அப்போது காவல் துறையினர் அவரை கைதுசெய்து கோயம்பேடு எம்ஜிஆர் பேருந்து நிலைய காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.

பாஜக தலைவர் வீட்டு முன் அக்கட்சி கொடியை தூக்கிலிட்டு போராட்டம் போராட்டம் நடத்திய பெண் கைது...!

பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் ரவுடிசத்தில் ஈடுபடுவதாகவும், தமிழ்நாடு பாஜக ரவுடிகளின் கூடாரமாக மாறிவருவதாகவும் குற்றஞ்சாட்டினார். இவற்றைக் கண்டிக்கும்விதமாகவும், முருகனை மாநிலத் தலைவர் பதவியிலிருந்து நீக்கக் கோரியும் இந்தப் போராட்டம் நடத்தியதாக நர்மதா கூறினார்.

இதையும் படிங்க...மாணவர்கள் சேர்க்கை: புதிய பள்ளிகளை தொடங்குவது குறித்து செப். 28இல் ஆய்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.