சென்னை: உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், கட்சியின் மகளிர் அணி சார்பில் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்காக மகளிர் அணி சார்பில் கேக் தயார் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. அதனை அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் வெட்டி, மகளிர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால் அவர் வராத காரணத்தால் துணை முதலமைச்சர் கேக் வெட்டி மகளிர் தின விழாவை கொண்டாடினார்.