ETV Bharat / state

திருமண ஆசைக்காட்டி ஏமாற்றிய காவலர்மீது பெண் புகார்! - சென்னையில் திருமண ஆசைக்காட்டி ஏமாற்றிய காவலர்மீது பெண் புகார்

சென்னை: திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தைக் கூறி ஏமாற்றிய ஆயுதப்படை காவலர் மீது பாதிக்கப்பட்ட பெண், காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

திருமண ஆசைக்காட்டி ஏமாற்றிய காவலர்
திருமண ஆசைக்காட்டி ஏமாற்றிய காவலர்
author img

By

Published : Dec 31, 2019, 9:54 AM IST

சென்னை அயனாவரம் ஏகாங்கிபுரத்தில் வசித்து வருபவர் ஓய்வுபெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் விஜயகுமார். இவரது மகன் வீரமணி, புதுப்பேட்டையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். 2017ஆம் ஆண்டு காவலர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அயனாவரம் பகுதியைச் சேர்ந்த காவியா (24) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பின் காதலாக மாறியது.

இந்நிலையில், காதலித்து திருமணம் செய்துகொள்வதாகக் கூறிய வீரமணி, அவரது தந்தை விஜயகுமாரின் பேச்சைக் கேட்டு திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றியதாகக் கூறிய காவியா, இது தொடர்பாக காவல் ஆணையத்தில் புகார் அளித்தார்.

பின்னர் பேசிய அவர், இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் அவரது நண்பர்களிடம் தன்னை காதலிப்பதாக அறிமுகம் செய்து வைத்ததாகவும் கூறினார். மேலும், திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தைக் கூறி தன்னிடம் பலமுறை உடலுறவு வைத்துக் கொண்டதாக கூறினார்.

காதலர்களாக இருந்தபோது எடுத்துகொண்ட புகைப்படம்
காதலர்களாக இருந்தபோது எடுத்துகொண்ட புகைப்படம்

இதனிடையே, திடீரென்று அவரது தந்தை தனது வீட்டிற்கு வந்து, உதவி ஆய்வாளருக்கு வீரமணி படித்துவருவதாகவும், அவருக்கு வேறு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்கப்போவதாகவும் மிரட்டியதாக காவியா குற்றஞ்சாட்டினார்.

இதையடுத்து, அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வீரமணியும் அவரது தந்தை விஜயகுமாரையும் காவல் துறையினர் வரவழைத்துப் பேசினர். அப்போது, வீரமணி திருமணத்திற்காக இரண்டு மாதம் கால அவகாசம் கேட்டனர். பின்னர், வசதியின்மையை சுட்டிக்காட்டியும் வரதட்சணை அதிகமாக கேட்டும் திருமணம் செய்து கொள்ளமுடியாது என வீரமணி கூறியுள்ளார். இதனால், மனமுடைந்த காவியா, புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

திருமண ஆசைக்காட்டி ஏமாற்றிய காவலர்
திருமண ஆசைக்காட்டி ஏமாற்றிய காவலர்

இது குறித்து, குற்றஞ்சாட்டப்பட்ட வீரமணியின் தந்தை விஜயகுமாரை தொடர்பு கொண்டபோது, தனது மகன் வீரமணியை, காவியாவுக்கு திருமணம் செய்து வைப்பதில் தான் மறுப்பு தெரிவிக்கவில்லை எனவும் காவியாவின் வீட்டிற்குச் சென்று பெண் பார்த்துவிட்டு வந்ததாகவும் கூறினார். மேலும், காவியாவின் பெற்றோர்கள் சாதியைக் காரணம் காட்டி, தங்களிடம் திருமணம் தொடர்பாக பேசவுமில்லை, வீட்டிற்கு வரவுமில்லை என விஜயகுமார் தெரிவித்தார்.

இதையும் படிங்கள்: திருமண பந்தத்தை தாண்டிய உறவு: ஆட்டோ ஓட்டுநர் கொலை

Intro:Body:காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஆயுதப்படை காவலர் ஏமாற்றிவிட்டதாக பாதிக்கப்பட்ட பெண் காவல் ஆணையர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க பேட்டி.

சென்னை அயனாவரம் ஏகாங்கிபுரத்தில் வசித்து வருபவர் ஓய்வுபெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் விஜயகுமார்.இவரது மகன் வீரமணி புதுப்பேட்டையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2017ஆம் ஆண்டு காவலர் பயிற்சியில் ஈடுப்பட்டு கொண்டிருந்த போது அயனாவரம் பகுதியை சேர்ந்த சரஸ்வதி (24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.பின்னர் நாளடைவில் காதலாக மாறி நண்பர்கள் அனைவருடனும் என்னை காதலிப்பதாக கூறி அறிமுகம் செய்து வைத்ததாக கூறினார்.மேலும் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி நம்ப வைத்து 2 வருடங்களாக காதலித்து தன்னிடம் பலமுறை அவர் உடலுறவு வைத்து கொண்டதாக கூறினார்.

பின்னர் திடீரென்று அவரது தந்தை மட்டும் தனது வீட்டிற்கு வந்து வீடு சிறியதாக உள்ளது எனவும்,தனது மகன் உதவி ஆய்வாளருக்கு படிப்பதாகவும்,வேறு பெண்ணை தனது மகனுக்கு நிச்சயம் செய்துவைத்ததாக கூறி என்னை மிரட்டிவிட்டு சென்றதாக அவர் கூறினார்.பின்னர் இதனால் அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் இதனால் அவரது தந்தை விஜயகுமார் மற்றும் வீரமணி ஆகியோரை போலீசார் வரவழைத்து பேசினர்.அப்போது வீரமணியின் தந்தை சிவகுமார் போலீஸ் வேலை போனாலும் பரவாயில்லை தன்னை திருமணம் செய்து வைக்கமாட்டேன் என கூறியதாக தெரிவித்தார்.இதனால் வீரமணி திருமணத்திற்கு 2 மாதம் காலம் கேட்டார்.பின்னர் வசதியின் காரணத்தை சுட்டிக்காட்டியும்,வரதட்சணை அதிகமாக கேட்டுவிட்டு திருமணம் செய்து கொள்ளமுடியாது என வீரமணி கூறியதால் மனமுடைந்து புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் அங்கு விசாரித்த உதவி ஆணையர் இந்த சம்பவத்தை விபத்தாக நினைத்து மறந்துவிட கூறியதாக அவர் தெரிவித்ததாக கூறினார்.

பின்னர் காவல் நிலையத்தில் எந்த விதமான நடவடிக்கை எடுக்காததால் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்ததாகவும் கண்ணீர் மல்க கூறினார்.மேலும் தன் மகனை பற்றி புகார் அளித்தால் கொலை செய்து விடுவதாக அவரது தந்தை விஜயகுமார் மிரட்டியதாகவும் கூறினார்.

இதை பற்றி குற்றம்சாட்டப்பட்டுள்ள வீரமணியின் தந்தை விஜயகுமாரை தொடர்பு கொண்ட போது தனது மகன் வீரமணியை சரஸ்வதி என்ற பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க தான் மறுப்பு தெரிவிக்கவில்லை எனவும் சரஸ்வதியின் வீட்டிற்கு சென்று பெண் பார்த்துவிட்டு வந்ததாகவும் அவர் கூறினார். ஆனால் சரஸ்வதியின் பெற்றோர்கள் ஜாதியை காரணம் காட்டி மறுபடியும் எங்களது வீட்டிற்கு திருமணம் தொடர்பாக வரவில்லை என அவர் தெரிவித்தார்.பின்னர் வரதட்சணை அதிகமாக கேட்டு திருமணம் செய்து வைக்கவில்லை என தெரிவிப்பது முற்றிலும் தவறு என மறுப்பு தெரிவித்தார்.

(பெண்ணின் பெயரை மாற்றி கொள்ளவும் பாலியல் புகார் என்பதால்)Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.