சென்னை: ஓட்டேரி எஸ்.வி.எம். நகரைச் சேர்ந்தவர் அமலா (30). இவருக்கு டேனியல் (5) என்ற மகன் உள்ளார். அமலா தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார். அமலாவின் எதிர் வீட்டில், கஸ்தூரி என்பவர் குடியிருந்துவருகிறார். இந்நிலையில் கஸ்தூரி வீட்டாருக்குச் சொந்தமான இருசக்கர வாகனத்தில், சிறுவன் டேனியல் ஏறி விளையாடியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கஸ்தூரி, சிறுவன் டேனியல், அவனது தாய் கமலா ஆகியோரைத் தகாத சொற்களால் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த அமலா மின்விசிறியில் புடவையை மாட்டி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார்.
இதனைக்கண்ட அக்கம்-பக்கத்தினர் அமலாவை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அமலாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தற்போது இந்தச் சம்பவம் குறித்து தலைமைச் செயலக குடியிருப்பு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: உடல் வலி நிவாரண மாத்திரையில் போதை - விற்பனை செய்த இருவர் கைது