ETV Bharat / state

விரைவில் முடிவடையுமா? புட்லூர் மேம்பாலப் பணிகள்! - Putluar flyover

நெடுஞ்சாலைப் பகுதியில் சில கடைகள், குடியிருப்புகளை உடனடியாக அப்புறப்படுத்தினால் புட்லூர் மேம்பாலப் பணிகள் விரைவாக முடிக்கப்படும் என்று மேம்பாலப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

புட்லூர் மேம்பாலப் பணிகள்  புட்லூர் மேம்பாலம்  காக்களூர் - புட்லுார் மேம்பாலம்  Kokkalur - Putluar flyover  Putluar flyover  Putlur flyover works
Kokkalur - Putluar flyover
author img

By

Published : Mar 5, 2021, 10:42 AM IST

சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில், புட்லூர் உள்ளது. புட்லூரின் மறுபுறத்திலிருந்து, காக்களூர் வருவதற்கு, ரயில்வே கடவுப்பாதை உள்ளது. இந்த கடவுப்பாதை வழியாக, தினமும், பல்லாயிரக்கணக்கான மக்கள், வேலை, மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட தேவைகளுக்காக கடந்து செல்கின்றனர். ஆனால், ரயில் தண்டவாளம் வழியாக, தினமும் 280க்கும் மேற்பட்ட புறநகர், விரைவு, சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதனால், காலை, மாலை நேரங்களில், நீண்ட நேரம் கடவுப்பாதை மூடப்படுகிறது. அந்தச் சமயத்தில், அவசர பணிக்கும், மருத்துவ தேவைக்குச் செல்லும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களும், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

இதன் காரணமாக புட்லூர் ரயில்வே கடவுப்பாதையில் மேம்பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதையேற்று, ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத் துறை, 2015ஆம் ஆண்டு, காக்களூர் - புட்லூரை இணைக்கும் வகையில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்ட அனுமதி வழங்கியது.

அதன்படி, 620 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலம் உடைய பாலம் கட்டும் பணி, அதே ஆண்டு தொடங்கப்பட்டு, ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் வகையில், இரண்டு தூண்கள் அமைக்கப்பட்டு, பணி நிறைவடைந்து விட்டது. ஆனால், நெடுஞ்சாலைப் பகுதியில், 26 தூண்கள் அமைக்கும் பணிக்கு, நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் நீடித்தது.

இந்தச் சிக்கலை நெடுஞ்சாலைத் துறை, நான்கு ஆண்டுகளாக போராடி, கடந்த 2019ஆம் ஆண்டு நிலங்களை கையகப்படுத்தியது. இதையடுத்து, மேம்பால பணியைத் தொடங்கியது. நெடுஞ்சாலைப் பகுதியில், 22 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் நான்கு தூண்கள் அமைக்கப்படாமல் உள்ளது. தூண்கள் அமைக்கவும், பாலம் கட்டவும், சில கடைகள் குடியிருப்புகள் இடையூறாக உள்ளதால், பணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அங்கு அமைக்கப்பட்டு உள்ள வீடுகளுக்கும் கடைகளுக்கும் உள்ள மதிப்பீட்டுத் தொகை வங்கி மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும் இன்னும் அந்த இடம் காலி செய்யாமல் இருக்கின்றன. அதனால் பொதுமக்கள் உடனடியாக இந்த இடங்களைக் காலி செய்தால், மேம்பாலப் பணியை நிறைவேற்ற உதவ வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இடர்ப்பாடுகள் உடனடியாக நீக்கினால் மேம்பால பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்று மேம்பால பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: இரவிலும் அண்ணா மேம்பாலத்தைத் திறக்க முடிவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.