ETV Bharat / state

காதலியுடன் சேர்ந்து கணவர் கொலை மிரட்டல்: மனைவி தீக்குளிக்க முயற்சி - திருமணம் தாண்டிய உறவு

கணவர் மீது திருமணம் தாண்டிய உறவு குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் காவல் துணை ஆணையர்  அலுவலகத்திற்கு சென்ற மனைவி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Suicide
Suicide
author img

By

Published : Aug 24, 2021, 10:47 AM IST

சென்னை அம்பத்தூர் புதூரைச் சேர்ந்தவர் அஜய் சத்யா (34). இவர், அதே பகுதியில் டோனி அண்ட் காய் என்ற அழகு நிலையம் நடத்தி வருகிறார்.

இவரது கடையில் திருமுல்லைவாயலை சேர்ந்த கவிதா (25) என்பவர் வேலை பார்த்தார். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து 2019ம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி திருவள்ளூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர், இருவரும் அழகு நிலையத்தின் மாடி வீட்டில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு தண்டையார்பேட்டையை சேர்ந்த சிந்து என்ற இளம்பெண் அழகு நிலையத்தில் பணியாற்ற வந்துள்ளார்.

அவருடன் அஜய் சத்யாவிற்கு திருமணத்தை தாண்டிய உறவு ஏற்பட்டுள்ளது. இதனை தெரிந்து கொண்ட கவிதா இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் அஜய் சத்யா, கவிதாவிற்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு மாதத்திற்கு முன்பு கவிதா பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

Sindhu
Sindhu
அதன் பிறகும், அஜய் சத்யா, சிந்து இருவரும் சேர்ந்து அடிக்கடி செல்போனில், அவதூறாக பேசி கவிதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து கவிதா அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் காவல்துறையினர் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.இதனால் மன உளைச்சலில் இருந்த கவிதா, ஆவடி காவல் துணை ஆணையர் அலுவலகம் முன்பு உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவரை மீட்டனர்.பின்னர், அவரை துணை கமிஷனர் அலுவலகத்துக்கு உள்ளே அழைத்து சென்றனர். அதன் பிறகு, கவிதாவிடம் துணை ஆணையர் மகேஷ் விசாரணை நடத்தினர். பின்னர் புகார் தொடர்பாக துணை ஆணையர் மகேஷ் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
Ajay Satya
Ajay Satya
இது குறித்து பாதிக்கப்பட்ட கவிதா கூறும்போது, நான் இந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த மூன்று மாதங்களிலேயே உரிமையாளர் அஜய் சத்தியா என்னை விரும்பி திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர் அழகுநிலையத்தில் வேலைக்கு வரும் பல பெண்களிடம் தொடர்ச்சியாக தவறாக நடந்து கொள்கிறார். இந்த நிலையில் புது வீடு கட்டுவதாக கூறி திடீரென என்னை எனது பெற்றோர் வீட்டில் விட்டு சென்றார்.
Suicide
Suicide
கடந்த ஜூன் மாதம் 17-ந்தேதி வரை அவருடன் பேசிக்கொண்டு தான் இருந்தேன். அவர் அழகுநிலையத்தில் தற்போது பணியாற்றும் சிந்து என்ற பெண்ணுடன் திருமணத்தை தாண்டிய உறவில் உள்ளார். எனது கணவருடன் இருக்கும் அந்த பெண் அவருடைய நண்பர்களை வைத்து எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். நான் காதலித்து திருமணம் செய்து கொண்டதால் என் பெற்றோர் என்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர்.

தற்போது நான் எந்த ஆதரவும் இல்லாமல் நிற்கிறேன். இதனால் என்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிய அஜய் சத்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற புகார் மனு கொடுத்துள்ளேன்" என்று கூறினார்.

இதையும் படிங்க : தற்கொலை நாடகத்தை காட்டிக் கொடுத்த இளைஞரின் செயல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.