ETV Bharat / state

விவாகரத்துக்கு முன்பே 2வது திருமணம்.. கணவர் மீது மனைவி புகார்! - பூந்தமல்லி காவல் நிலையம்

Poonamallee Marriage issue: தனது கணவர் 2வது திருமணம் செய்து கொண்டதாகவும், அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், மனைவி பூந்தமல்லி காவல் நிலையத்தில் திருமணமான புகைப்படத்துடன் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Poonamallee Marriage issue
விவாகரத்துக்கு முன்பே கணவர் 2வது திருமணம் செய்து கொண்டதாக மனைவி புகார்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 20, 2023, 2:51 PM IST

விவாகரத்துக்கு முன்பே கணவர் 2வது திருமணம் செய்து கொண்டதாக மனைவி புகார்

சென்னை: பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பத்தைச் சேர்ந்தவர் திவ்யா. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் (30) என்பவருக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து திவ்யா கர்ப்பமான நிலையில், அவரை பெற்றோர் வீட்டில் விட்டுச் சென்றவர், இதுவரை மனைவியையும், குழந்தையும் பார்க்க வரவில்லை எனவும், தனது கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும் பூந்தமல்லி காவல் நிலையத்தில் மனைவி புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இது குறித்து போலீசார் விசாரணை செய்த நிலையில், திவ்யா தனக்கு திருமணமானபோது எடுத்துக்கொண்ட பெரிய அளவிலான புகைப்படத்தை கையில் வைத்தபடி, தனது உறவினர்களுடன் பூந்தமல்லி காவல் நிலையத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும், தனது கணவர் தன்னைப் பிரிந்து சென்ற நிலையில், வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், அதற்கு முன்பாக பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் புகார் வைத்துள்ளார்.

இந்த வழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வருவதால், தற்போது இந்த வழக்கானது பூந்தமல்லியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக மாற்றப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திருநெல்வேலியில் வெள்ளத்தில் காணாமல் போன மகன் சடலமாக மீட்கப்பட்டதால் தாய் அதிர்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.