ETV Bharat / state

மக்களுக்கு பாதுகாப்பைத் தருகிறதா 'கேட்டட்' கம்யூனிட்டிக்கள்? - features of gated communities

கூட்டுக் குடும்பத்திற்கு அடையாளமாகத் திகழும் இந்தியா கடந்த சில வருடங்களாக தனிக்குடும்ப கலாச்சாரத்தை நோக்கி நகர்ந்து வருகின்றன. அதிலும் பெரும்பாலானோர் அடுக்குமாடிக் குடியிருப்புகளையே விரும்புகின்றனர். அதற்கு காரணங்களாக அவர்கள் எவற்றை முன்வைக்கின்றனர்? அலசுகிறது இந்தத் தொகுப்பு...

why people moved for gated communities
why people moved for gated communities
author img

By

Published : Feb 8, 2021, 10:44 PM IST

உலக நாடுகளில் இந்தியா என்பது குடும்ப உறவுகளால் பின்னிப்பிணைக்கப்பட்ட நாடு என்ற அடையாளம் உள்ளது. அந்த அடையாளம் இந்த 21ஆம் நூற்றாண்டில் சிறிது சிறிதாக தளர்ந்து வருகிறது. உலகமயமாக்கலுக்கு உள்ளாகி இந்தியா தனது பரிமாணத்தை மாற்றி வருவதாகவே தெரிகிறது.

உலகமயமாக்கல் மட்டுமின்றி தொழில்மயமாக்கல், மேற்கத்திய உணவு, உடை கலாச்சாரங்களிலும் இந்தியா சிக்கித் தவித்து வருகிறது. பணி உள்ளிட்ட காரணங்களுக்காக கூட்டுக்குடும்பங்கள் தனிக்குடித்தனங்களாக மாறத் தொடங்கி, தற்போது அவை நாகரீகமென கருதும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

மாறிவரும் சூழலுக்கேற்ப, மக்கள் தங்கள் கலாச்சாரங்களையும், வாழ்க்கை முறையையும் மாற்றி வருகின்றனர். அதன் ஒருபகுதியே அடிக்குமாடி குடியிருப்புக் கலாச்சாரம். இவை தற்போதைய இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அவை படிப்படியாக வளர்ச்சியடைந்து, சென்னையில் தற்போது அடுக்குமாடி கட்டடம் இல்லாத இடமே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

இவை பரிணாம வளர்ச்சிக் கண்டு தற்போது 'கேட்டட் கம்யூனிட்டி' என்று பிரபலமாகியுள்ளது. இந்த 'கேட்டட் கம்யூனிட்டி' அமைப்பானது, தங்கள் குடியிருப்பு வளாகத்திற்குள்ளேயே தங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இருக்கும் வகையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பு

அடுக்குமாடி குடியிருப்பு என்பது அனைத்து வசதிகளும் ஒரே குடியிருப்பு வளாகத்திற்குள் உள்ளவாறு அமைந்துள்ள பகுதி. அதாவது மக்களின் அடிப்படை தேவைகளான காய்கறி மார்க்கெட், பள்ளி, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் வெளியில் செல்லாமல், அவர்கள் தங்கியுள்ள குடியிருப்பு பகுதிக்குள்ளாகவே கிடைக்க வழிவகை செய்துள்ளது.

பாதுகாப்பு

அடுக்குமாடி குடியிருப்பில் மக்கள் தங்க அதிகம் விருப்பம் தெரிவிப்பதற்கான காரணமாகக் கூறுவது, அவர்கள் அங்கு பாதுகாப்பாக உணர்கின்றனர் என்பதே. மேலும் அவர்களின் அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் சில நிமிடங்களிலிலேயே கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளதும் என்கின்றனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய அடுக்குமாடி குடியிருப்புவாசி ஸ்வேதா, "கேட்டட் கம்யூனிட்டியில் வசிக்கும் மக்கள் தொடர்பு கொள்வதற்கென தனி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு, தங்களை யார் சந்திக்க வருகின்றனர் என்பது முன்னதாகவே தெரிவிக்கப்படும். தங்களது அனுமதி கிடைக்கப் பெறவில்லை என்றாலோ, அல்லது நாம் அவரை சந்திக்க விரும்பவில்லை என்றாலோ அவர்கள் அந்த குடியிருப்பு வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். இதனால், தாங்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்கிறோம்" என்கிறார்.

மக்களுக்கு பாதுகாப்பைத் தருகிறதா கேட்டட் கம்யூனிட்டிக்கள்?

அத்தியாவசிய தேவைகள்

குடியிருப்புவாசிகளுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், சூப்பர் மார்க்கெட், மெடிக்கல் முதலியவை எளிதில் அணுகக்கூடிய வகையில் அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி குழந்தைகளுக்கு பள்ளிகள், விளையாட்டு மைதானம் முதலியவை அருகில் உள்ளது. சில குடியிருப்புகளில் தியேட்டர் உள்ளிட்ட வசதிகளும் வளாகத்திற்குள்ளேயே ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. ஆகவே சொகுசு அடுக்குமாடி குடியிருப்பை பலர் தேர்வு செய்கின்றனர்.

கட்டுப்பாடுகள்

அடுக்குமாடி குடியிருப்பில் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் நலன் கருதி, செல்லப்பிராணிகள் வளர்க்கக்கூடாது, மாடியில் துணிகளை காயவைக்கக் கூடாது, வீட்டுச் சுவற்றில் ஆணி அடிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் உள்ளது. இது போன்ற கட்டுப்பாடுகள் சிறிது கடினமாக இருந்தாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக இவற்றை எதிர்கொள்ளலாம்" என்கிறார் ஸ்வேதா.

பல்வேறு சமூகம்

இந்த 'கேட்டட் கம்யூனிட்டி'களில் அனைத்து சமூகனத்தினரும் ஒரே இடத்தில் வசிப்பதால், பல்வேறு கலாச்சாரங்கள் சங்கமிக்கும் இடமாக இவை உள்ளது. இதனால், பல நாட்களில் குடியிருப்புகள் விழாக்கோலம் பூண்டுள்ளது. அதுமட்டுமின்றி, பன்முகத்தன்மைகளை கொண்டாடவும், தங்களது மகிழ்ச்சியை பிறருடன் பகிர்ந்து கொள்ளவும், பல்வேறு கலாச்சாரங்களை அறிந்து கொள்ளவும், குழந்தைகள் பாகுபாடின்றி வளரவும் இந்த குடியிருப்புகள் துணை புரிகின்றன என்கின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.