ETV Bharat / state

"வட மாநிலத்தவர்களுக்கு எதிராக பேசும் சீமான் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?" - பிரசாந்த் கிஷோர்! - வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்குதல் வீடியோ

தமிழ்நாட்டில் உள்ள இந்தி பேசும் மக்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? என பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Why
Why
author img

By

Published : Mar 10, 2023, 7:34 PM IST

சென்னை: சென்னை: தமிழ்நாட்டில் வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற சில வீடியோக்கள் அண்மையில் சமூக வலைதளங்களில் வெளியாகி, வட மாநிலத்தவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த வீடியோக்கள் போலியானவை என்றும், இதுபோன்ற வீடியோக்களை மக்கள் சமூக ஊடகங்களில் பரப்பக்கூடாது என்றும் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தினார்.

தமிழ்நாட்டில் பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக செய்திகள் வெளியானது குறித்து பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநில அரசுகளும் கவலை தெரிவித்திருந்தன. இதற்கும் தமிழக காவல்துறை விளக்கமளித்திருந்தது. வட மாநிலத்தினர் தமிழ்நாட்டில் பாதுகாப்பாக இருப்பதாகவும், இது தொடர்பாக வதந்திகளை பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரித்தது.

தமிழ்நாட்டில் வட மாநிலத்தினர் பிரச்சினை பூதாகரமான நிலையில், இதற்கு மூலக்காரணம் யார்? என்பது தொடர்பாக அரசியல் கட்சியினர் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டனர். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை வன்முறையைத் தூண்டும் வகையில் உள்ளதாக புகார் எழுந்த நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், தனது சொந்த மாநிலமான பீகாரில் நேரடியாக அரசியலில் இறங்கியுள்ள பிரசாந்த் கிஷோர் இன்று(மார்ச்.10), ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வடமாநில தொழிலாளர்கள் குறித்து பேசும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் உள்ள வட மாநிலத்தவர்களை விரட்டி அடிப்பேன் என சீமான் ஆவேசமாக பேசியுள்ளார். பிரசாந்த் கிஷோர் சீமான் பேச்சை இந்தியில் மொழிபெயர்த்து அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார்.

பிரசாந்த் கிஷோர் ட்விட்டர் பதிவு
பிரசாந்த் கிஷோர் ட்விட்டர் பதிவு

மேலும், "வெறுப்பு பிரச்சாரம் செய்யும் வகையிலோ அல்லது வன்முறையை தூண்டும் வகையிலோ வீடியோ வெளியிடுவோரை சட்டப்படி கடுமையாக தண்டிக்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள இந்தி பேசும் மக்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் பேசும் சீமான் போன்றோர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?" என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் கடந்த 2021ஆம் ஆண்டில் மேற்குவங்கம் மற்றும் தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் திரிணாமுல் காங்கிரஸ், திமுக கட்சிகளுக்கு தேர்தல் வியூக ஆலோசகராக பணியாற்றினார். கட்சி, தனி நபர் என்ற எந்த பாகுபாடும் இன்றி தேர்தல் வியூக ஆலோசகராக பணியாற்றினார்.

கடந்த 2021ஆம் ஆண்டு, தேர்தல் வியூக நிபுணர் பணியில் இருந்து விலகுவதாக அறிவித்த அவர், தற்போது தனது சொந்த மாநிலமான பீகாரில் நேரடியாக அரசியலில் இறங்கியுள்ளார். பீகாரில் தனியாக அரசியல் கட்சி தொடங்குவதற்கான நடவடிக்கையில் அவர் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. அதேநேரம், 2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கான தேர்தல் வியூகத்தை வகுத்து கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ‘அரசியலமைப்புச் சட்டம் 200’ஐ ஆளுநர் படிக்க வேண்டும் - சபாநாயகர் அப்பாவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.