ETV Bharat / state

அக்கவுண்டில் பணம் இருந்தும் கடனை ஏன் கட்டவில்லை? - விஷாலுக்கு நீதிமன்றம் கேள்வி! - லைகா நிறுவனம்

Actor vishal vs Lyca Case: வங்கியில் பணம் இருந்தும் லைகா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய கடனை ஏன் இன்னும் செலுத்தவில்லை? என நடிகர் விஷாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 12, 2023, 4:17 PM IST

சென்னை: நடிகர் விஷால், தனது 'விஷால் பிலிம் பேக்டரி' நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு, திரும்பச் செலுத்தியது. அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதனை மீறி, ‘வீரமே வாகை சூடும்’ என்ற படத்தை விஷால் நிறுவனம் வெளியிட இருந்த நிலையில் அதற்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அதன் பின்னர், நடிகர் விஷாலுக்கு 15 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்தவும், சொத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில், சொத்து ஆவணங்களை மட்டும் தாக்கல் செய்தார். ஆனால் 15 கோடி ரூபாயை இதுவரை நீதிமன்றத்தில் செலுத்தவில்லை. இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி அப்தூல் குத்தூஸ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, லைகா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்ற உத்தரவின்படி விஷால் தாக்கல் செய்த வங்கி பரிவர்த்தனை படி 80 கோடி ரூபாய் பரிவர்த்தனை நடந்துள்ளதாகவும், பணம் இருந்தும் வேண்டுமென்றே தங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை விஷால் செலுத்தாமல் இருப்பதாகக் குற்றம்சாட்டினார். அது தொடர்பான மெமோ தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய லைகா தரப்பு வழக்கறிஞர், தங்களுக்குச் செலுத்த வேண்டிய தொகையில் பாதி தொகையையாவது டெபாசிட் செய்ய விஷாலுக்கு உத்தரவிட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த விஷால் தரப்பு வழக்கறிஞர், மெமோவிற்கு பதில் அளிப்பதற்கு அவகாசம் வழங்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “பணத்தை ஏன் இன்னும் திரும்பச் செலுத்தாமல் இருக்கிறீர்கள், செலுத்த வேண்டியது தானே” என கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த விஷால் தரப்பு வழக்கறிஞர், பணத்தைச் செலுத்த தாங்கள் தயாராக இருப்பதாகவும், அவர்கள் தான் பேச்சுவார்த்தைக்கு முன்வருவதில்லை எனவும் கூறினார். இதனையடுத்து வழக்கின் விசாரணையை நவம்பர் 1ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறு கருத்து: சிறப்பு நீதிமன்றத்தில் நடிகர் எஸ்.வி சேகர் மறுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.