தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நேற்று (பிப்ரவரி 22) நடைபெற்றது. இம்முறை சென்னை அடுத்த தாம்பரத்தை தலைமையாக கொண்டு 70 வார்டுகளுடன் புதிதாக உருவாக்கபட்ட தாம்பரம் மாநகராட்சியில் முதல் முறையாக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
70 வார்டுகளில் பலவேறு கட்சிகள் மற்றும் சுயேட்சையாகவும் 684 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.இதில் 50 இடங்களில் திமுகவும், 9 இடங்களில் அதிமுகவும், 7 இடங்களில் சுயேட்சையும், 2 இடங்களில் காங்கிரசும், 1 இடத்தில் கம்யூனிஸ்டும், 1 இடத்தில் மதிமுகவும் வெற்றி பெற்றது.
70 வார்டுகளில் திமுக கூட்டணி பெரும்பான்மையான வெற்றி பெற்று மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளை கைப்பற்றியது. தாம்பரம் மாநகராட்சியில் தனித்துப் போட்டியிட்ட பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
திமுகவில் ஆறு வார்டுகளில் ஆதிதிராவிடர் பெண்கள் போட்டியிட்டனர். 32ஆவது வார்டில், கமலக்கண்ணன் என்பவரின் மகள் வசந்தகுமாரி சுயேட்சையாக போட்டியிட்டார்.
வசந்தகுமாரி பி.எஸ்.சி கெமிக்கல் படித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தேர்தலில், வசந்தகுமாரி வெற்றி பெற்றுள்ளதையடுத்து,இவரை மேயராக தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : நகர்ப்புற தேர்தல் 2022: திமுக கூட்டணி அமோக வெற்றி