சென்னை: ராணுவ கட்டுப்பாடு கொண்ட இயக்கம் என்று வர்ணிக்கப்பட்ட அ.தி.மு.க.வில், ஒற்றை தலைமை விவகாரம் புயலை கிளப்பி இருக்கிறது. இப்போது இபிஎஸ் ஓபிஎஸ் இடையே கோஷ்டி பூசல் வலுத்து வருகிறது.
ஒற்றை தலைமை விவகாரத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் அதிருப்தியில் உள்ளார். தொடர்ந்து அவர் தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதே போல இபிஎஸ் தனது வீட்டிலும் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஓபிஎஸ் - ன் ஆதரவாளர்கள்: ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான ஆர்.வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பி.எச்.மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ., ஜே.சி.டி.பிரபாகர், எம்.எம்.பாபு ஆகியோரும் தற்போது வரை ஆதரவு கரம் காட்டி வருகின்றனர்.
இபிஎஸ் - ன் ஆதரவாளர்கள்: எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களான கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, செல்லூர் ராஜூ, சி.விஜயபாஸ்கர், என்.ஆர்.சிவபதி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, காமராஜ், ஆர்.பி.உதயகுமார், மு.தம்பிதுரை எம்.பி. ஆகியோர் தற்போது வரை ஆதரவு கரம் காட்டி வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமியின் கடிதம்: எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்திற்கு, “அ.தி.மு.க. தொடர்பாக இனி ஓபிஎஸ்யிடம் தேர்தல் ஆணையம் எந்த தகவல் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம். அதுபோல அவருக்கு ஆதரவாக யார் மனு கொடுத்தாலும் அவர்களுக்கும் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை. தற்போதைய சூழ்நிலையில் அதிமுக தொண்டர்கள் மத்தியில் அவர் செல்வாக்கை இழந்துவிட்டார்” ,என 40 பக்கம் கடிதம் எழுதியுள்ளார்.
அதிமுகவின் முக்கியமான தினம்: மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று (ஜூலை 9) நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு வருகின்ற 11 கூட்டுவதற்கு தடை கோரிய வழக்கு விசாரணையில், அடுத்த தலைமையை தீர்மானிக்கும் அதிகாரம் தலைமை கழகத்திற்கு முழு அதிகாரம் உள்ளது என்று இபிஎஸ் தரப்பில் கூறப்பட்டது.
பொதுக்குழு கூட்டி தான் ஆனால் முடிவை எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் கூறப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஜூலை 11ஆம் தேதி காலை 9:15 அதிமுக பொதுக்குழு கூட்டுறவு தொடர்பாக தீர்ப்பு வழங்கப்படும் தெரிவித்தார்.
பொதுக்குழு குறித்து அன்றைய தினம் அறிவிப்பு வெளியாகும் நிலையில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இன் ஆதரவாளர்களின் நிலைப்பாடு மாற்றம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே கடும் வாக்குவாதம்